spot-hotர்.எஃப். பிலிம்ஸ் சார்பில் வி.ஆர்.ஆர். தயாரித்து இயக்கியுள்ள படம் "ஸ்பாட்.' இதில் கராத்தே கௌசிக் கதாநாயகனாக நடிக்க, அக்னி பவார் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் நாசர், "பருத்திவீரன்' சரவணன், ரேஹான், சங்கிலி முருகன், டைகர் கோபால், ஜோசப், ராஜ்குமார், ரிஷிகாந்த், சேரன் ராஜ், மாஸ்டர் தருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க சேஸிங் காட்சிகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்களை விவேகா மற்றும் ஜீவன் மயில் இருவரும் எழுத, விஜய் சங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மார்ச்-8 ஆம் தேதி இந்தப் படம் வெளியா கவுள்ள நிலை யில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா 27-ஆம் தேதி காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

-ஸ்டில்ஸ்: எஸ்.பி. சுந்தர்

Advertisment