சினிமா உலகைப்போலவே சீரியல் உலகிலும் நடிகர்- நடிகைகளின் விவாகரத்தும் தற்கொலைகளும் தற்போது சகஜமாகிவிட்டன. சினிமாவிலோ நடிகைகள் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
ஆனால் சீரியல் உலகிலோ நடிகைகளின் கணவன்மார்கள் தற்கொலை செய்து அதிர்ச்சியளிக்கிறார்கள்.
"பிரியமானவளே', "அரண்மனைக்கிளி', "டார்லிங் டார்லிங்' போன்ற சீரியல்கள்மூலம் பிரபலமான நந்தினியின் முதல் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார். கார்த்திகேயன் இறந்து ஒரு வருடம் கூடாத ஆகாத நிலையில், தன்னுடன் நடிக்கும் டி.வி. நடிகரான யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நந்தினி.
டி.வி. சீரியலின் இன்னொரு பிரபலமான நடிகை ரேகாவின் கணவர் கோபிநாத் 2019 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கோபிநாத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால், ரேகாவிற்கும் அவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததால், வெறுப்பாகி கோபிநாத் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் சொல்லப்பட்டது.
"ஆயுத பூஜை' படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக வரும் சபர்ணா, டி.வி. சீரியல்கள்மூலம் பிரபலமானவர்.
அவரும் திடீரென தற்கொலை செய்து கொண்டார். "ஜில்லுன்னு ஒரு காதல்' உட்பட சில படங்களில் வைகைப்புயலுக்கு காமெடி ஜோடிபோட்ட ஷோபனா, நந்தனத்திலுள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சன் டி.வி.யால் பிரபலமான வைஷ்ணவி, அமீரின் "மௌனம் பேசியதே' படம்மூலம் பளிச்சென தெரிய ஆரம்பித்தார். காதல் தோல்வியால் வைஷ்ணவியும் தற்கொலை செய்து கொண்டார்.
இப்போது லேட்டஸ்டாக தற்கொலைக்கு முயன்றிருப்பவர் "பாவமன்னிப்பு', "வம்சம்' சீரியல்கள்மூலம் பிரபலமான ஜெயஸ்ரீ. இன்னொரு டி.வி. சீரியல் நடிகையான மகாலட்சுமியுடனான கள்ளத் தொடர்பால், தனது கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி புகார் அளித்தார் ஜெயஸ்ரீ. மகாலட்சுமியின் கணவர் அனிலுடன் ஜெயஸ்ரீக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக பதிலுக்குப் போட்டுத் தாக்கினார் ஈஸ்வர். (இந்த விவகாரங்களையெல்லாம் 2019 டிச. 17 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழில் விலாவாரியாக எழுதியுள்ளோம்.) அந்த ஜெயஸ்ரீதான், கடந்த 16-ஆம் தேதி தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப் பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
சீரியல் உலகில் அதெல்லாம் தற்கொலை ரகங்கள் என்றால், விவாகரத்து களும் பல ரகங்களில் இருக்கின்றன. விஜய் டி.வி. மூலம் புகழடைந்த டி.டி. என்ற திவ்யதர்ஷினி, கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபரைத் திருமணம் செய்து, ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தார். ""ஆத்தாடி ஆத்தோவ்... டிடிக்கு இம்புட்டு ஆம்பளைங்களோட லிங்க்’ இருக்குன்னு தெரியாம கழுத்த நீட்டிட்டேன்'' என கண் கலங்கினார், திவ்யதர்ஷினியின் கணவர்.
அந்த டிடிதான் இப்போது வாட்டசாட்டமான இளைஞர் ஒருவருடன் ஸ்டார் ஓட்டல்களிலும், நீச்சல் குளத்திலும் படு கவர்ச்சியாக கும்மாளம் போட்டுக்கொண்டிருக் கிறார்.
என்னங்கப்பு, ஸ்பெஷல் ஸ்டோரிக்குத் தக்கன கன்டென்ட் இருக்கா?
-பரமேஷ்