Advertisment

நெசவுக்கலை பற்றிப் பேசும் "தறி'

/idhalgal/cinikkuttu/speaking-weaving-loom

பொழுதுபோக்கு சேனலான "கலர்ஸ்' தமிழ், தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதைத் தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர் களின் திறமையை தனது நிகழ்ச்சி களின்மூலம் காட்சிப்படுத்தி கொண்டாடி வருகிறது. இந்த குறிக்கோளைப் பின்தொடரும் வகையில், "கலர்ஸ்' தமிழ்த் தொலைக்காட்சி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து திங்கள்முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு "தறி' என்கிற புத்தம்பு

பொழுதுபோக்கு சேனலான "கலர்ஸ்' தமிழ், தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதைத் தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர் களின் திறமையை தனது நிகழ்ச்சி களின்மூலம் காட்சிப்படுத்தி கொண்டாடி வருகிறது. இந்த குறிக்கோளைப் பின்தொடரும் வகையில், "கலர்ஸ்' தமிழ்த் தொலைக்காட்சி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து திங்கள்முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு "தறி' என்கிற புத்தம்புது மெகாதொடரை ஒளிபரப்பி வருகிறது.

Advertisment

th

மெதுவாக மறைந்துவரும் நமது பாரம்பரிய நெசவுத்தொழிலுக்கு உயிரூட்டி, அதை மீட்சிபெறச் செய்ய வேண்டுமென்ற குறிக்கோளுடைய ஒரு பெண்ணின் பயணத்தை நேர்த்தி யான கதையாக "தறி' சொல்கிறது. இளம்பெண்ணான அன்னம் (ஸ்ரீநிதி நடிப்பில்) என்னும் கதாபாத்தி ரத்தின் வழியாகச் சொல்லப்படும் இந்தக் கதை, நொடித்துப்போன ஒரு நெசவாளர் குடும்பத்தின் போராட்டங்களையும், மெல்லமெல்ல மறைந்துவருகிற பாரம் பரிய நெசவுக்கலைக்கு புத்துயிரூட்டு வதற்கான அவர்களது மனப்போராட்டத் தையும் பார்வையாளர்களை உணர்ச்சி கரமான உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது. நெசவாளிகளின் வாழ்க் கைச் சவால்களை நிஜமாகப் பிரதி பலிக்கிற இந்த நெடுந்தொடரில் சபரி, மு.ராமசாமி, பரீனா, அங்கனா மற்றும் இன்னும் பல திறமையான நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடர்மூலம் தயாரிப்பாள ராக களமிறங்கி இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜின் மாஜி மனைவியான நடிகை லலிதாகுமாரி. "தறி' தொடர் தயாரிப்பது குறித்து தயாரிப்பாளர் லலிதாகுமாரி பேசுகையில், ""நெசவாளர் சமூகத்தின் உண்மையான சாரத்தையும் அவர்களது சவால்களையும் நாங்கள் நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறோம்.

பாரம்பரியமான நெசவுத்தொழிலைப் பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்து வதில் இந்த நிகழ்ச்சி ஒரு வினையூக்கியாக இருக்கும்'' என்றார்.

"தறி' நெடுந்தொடரை சக்திவேல் இயக்கிவருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ""காஞ்சிபுரம் பல ஆண்டுகளாக நெசவுக்கலையை தமது உயிராகக் காப்பாற்றி வருகிற பட்டு நகரமாகும். இந்த நகரின் மரபும் பாரம்பரியமும் உலகளாவிய அங்கீ காரங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அதில் பட்டுத்தொழிலில் இரவும் பகலும் அயராது பாடுபட்ட பல தலைமுறைகளைச் சேர்ந்த நெசவாளி களின் பங்கு அதிகம்'' என்றார்.

Advertisment
cine160419
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe