50-க்கும் மேற் பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், "நாடோடிகள்' அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல் படை வீரர் ப்ராஷ் இயக்கும் "ஆபரேஷன் அரபைமா' படத்தின்மூலம் வசன கர்த்தாவாகியிருக்கிறார்.
வசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, ""பாடல் எழுதுவதைவிட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன் சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின்மூலம் மெட்டுகளுக்குப் பொருத்தினால் போதும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan_52.jpg)
ஆனால் வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்வி டப் பின்னணி, பேச்சு மொழிப் பின்னணி, கதா பாத்திரத்தின் அப்போ தைய மனநிலை, இயக்குநர் பேச விரும்பும் கருத்து இப்படி நிறைய விஷயங் களைத் தெரிந்து வசனம் எழுதினால்தான் படம் பார்க்கிறவர்கள் அந்தப் படத் தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்றமுடியும்.
"ஆபரேஷன் அரபைமா', "ஒங்கள போடணும் சார்' என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வெவ்வேறு மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும் மொத்தமாக வேறுபட்டது. அந் தந்த படத்திற்கான தேவை யைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் "பிரளயம்', "மிலிடெரி' ஆகிய படங்களுக்கு வசனம் எழுது கிறேன்'' என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-09/murugan-t_0.jpg)