Advertisment

மண் சார்ந்த வாழ்வியல்!

/idhalgal/cinikkuttu/soil-life

ருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ, டி.வி., பத்திரிகை, இணையதளம் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களில் பணியாற்றியவர் ஆர்செல் ஆறுமுகம். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாததால் ஏகப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு தனது முதல் படைப்பான "ஏகாந்தம்' மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஆறுமுகம்.

Advertisment

neraja

கோடம்பாக

ருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ, டி.வி., பத்திரிகை, இணையதளம் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களில் பணியாற்றியவர் ஆர்செல் ஆறுமுகம். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாததால் ஏகப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு தனது முதல் படைப்பான "ஏகாந்தம்' மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஆறுமுகம்.

Advertisment

neraja

கோடம்பாக்கம் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குரியதாக இருக்கிறது "ஏகாந்தம்'. படம் பற்றி நம்மிடம் ஆர்செல் ஆறுமுகம் பேசினார். ""முழுக்க முழுக்க மண்சார்ந்த வாழ்வியல்முறையைச் சொல்லும் கிராமியக் கதைதான் "ஏகாந்தம்'. பிறந்த ஊரைவிட்டு, நாட்டைவிட்டு யாரெல்லாம் நகரம், நாகரிகம் என்று புலம் பெயர்ந்து வந்தார்களோ, அவர்கள் ஒவ்வொருவரும் இப்படத்தின் கதாபாத்திரங்கள்.

barathirajaதஞ்சை ஆறுமுகம், மகேந்திரன், ஜோதி, பெங்களூர் பாலராஜ் ஆண்டனி, சித்தமருத்துவர் ஜெயசீலன், சென்னை வி.மூர்த்தி, பெத்தானூர் அரசு மணி ஆகிய எனது நண்பர்களின் உதவியுடன் இந்தப் படத்தை 32 நாட்களில் எடுத்து முடித்தேன். படப்பிடிப்பின் பெரும்பகுதி கொடைக்கானல் அருகில் உள்ள பண்ணைக்காட்டில் நடந்தது.

Advertisment

"இருக்கு ஆனா இல்லை' படத்தின் விவாந்த் தான் இதில் ஹீரோ. ஐந்து மலையாளப் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த நீரஜா தான் ஹீரோயின். மற்றும் அனுபமா குமார், தென்னவன் ஆகியோரும் நடித்திருக்கி றார்கள். "தவசி', "நரசிம்மா' படங்களின் கேமராமேன் எஸ்.கே. பூபதிதான் "ஏகாந்த'த்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். "ரேணிகுண்டா' கணேஷ் ராகவேந்திரா இசைக்கு யுகபாரதி, ஏக்நாத், டி.ஜெ.குமார் பாடல்கள் எழுத, எஸ்.பி.அகமது எடிட்டிங் பண்ண, கே.வி.லோகு ஆர்ட் டைரக்ட் பொறுப்பை ஏற்றுள்ளார்.

கண்டிப்பாக படம் ஜெயிக்கும், மக்கள் மத்தியில் நல்லவிதமாக பேசப்படும்'' என நம்பிக்கையுடன் பேசினார் ஆர்செல் ஆறுமுகம்.

cine250918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe