லிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப் படம் "ஜிப்ஸி'. "குக்கூ', "ஜோக்கர்' ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் இந்தப் படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

Advertisment

nalakannu

ஒடுக்குமுறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின் குரலாகவும், கள போராளி களின் குரலாகவும், "வெரி வெரி பேட்...' எனத் தொடங்கும் பாடல் ஒன்றை யுகபாரதி எழுதியிருக்கிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை யமைத்திருக்கிறார்.

இந்தப் பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் படமாக்கத் திட்டமிட்டபோது, தமிழ்ச் சமூகத்தில் உண்மையாகவே களத்தில் போராடும் போராளிகள் இந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்றால் அர்த்த முள்ளதாக இருக்குமென்று எண்ணினார் கள். அதைத் தொடர்ந்து தோழர் நல்ல கண்ணு, தோழர் திருமுருகன் காந்தி, தோழர் முகிலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சுற்றுச்சூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ப்யூஷ் மனுஷ், திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் க்ரேஸ் பானு, ஆதித்தமிழர் பேரவையைச் சோர்ந்த தோழர் ஜக்கை யன், தோழர் வளர்மதி ஆகியோரை சந்தித்து அனுமதி கேட்டனர். அதற்கு அவர்களும் மனமுவந்து ஒத்துழைப்பு அளித்தனர்.

இவர்கள் அனைவரும் பங்குபெற்ற படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்றது இவர் களுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கலந்துகொண்டார்.