Advertisment

சின்னச் சின்ன NEWS

/idhalgal/cinikkuttu/small-small-news

சென்னை தியாகராய நகரில் இருக்கும் தனது பழைய வீட்டை, தனது ரசிகர்மன்ற தலைமை அலுவலகமாக மாற்றிவிட்டாராம் சூர்யா. கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் வளர்ந்துவரும் "காப்பான்' படத்தில் பிரதமராக நடி

சென்னை தியாகராய நகரில் இருக்கும் தனது பழைய வீட்டை, தனது ரசிகர்மன்ற தலைமை அலுவலகமாக மாற்றிவிட்டாராம் சூர்யா. கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் வளர்ந்துவரும் "காப்பான்' படத்தில் பிரதமராக நடிக்கும் மோகன்லாலுக்கு பாடிகார்டாக வருகிறார் சூர்யா. ரயில் சேஸிங் சம்பந்தப்பட்ட காட்சியை எடுக்க தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்காததால் ஒரிஸாவில் ஷூட்டிங் நடந்துவருகிறதாம். ஆர்யாவும் சாயிஷா சைகலும் படத்தில் இருக்கிறார்கள். ஆர்யாவுடன் திருமணம் ஆனாலும் படங்களில் நடிப்பதை தொடர்வாராம் சாயிஷா.

Advertisment

smallsmallnews

"நேத்ரா' ரிசல்ட் சுமாராக இருந்தாலும் பிரசாந்தை வைத்து அடுத்த படத்தை டைரக்ட் பண்ணும் வேலைகளில் மும்முரமாகிவிட்டார் ஏ. வெங்கடேஷ். டைரக்டர் லிங்குசாமியின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மகன்தான் பிரபுசாலமனின் "கும்கி-2' ஹீரோவாம்.

Advertisment

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இப்போது தங்களது சொந்த ஊரிலேயே ஷூட்டிங்கை நடத்த ஆரம்பித்துவிட்டார்களாம். காரணம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அவுட்டோர் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகவில்லையாம்.

cine020419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe