தம் பாவா தயாரித்த "தப்பாட்டம்' படம்தான் துரை சுதாகருக்கு முதல் படம். ஆனால் முதல் படத்திலேயே "பப்ளிக் ஸ்டார்' பட்டத்துடன் கோலிவுட்டில் என்ட்ரியானார்.

Advertisment

அதன்பின் சில பட வாய்ப்புகள் வரிசையாக வந்தாலும் சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தார் துரை சுதாகர்.

அப்படி நடித்த "களவாணி-2' படம் துரை சுதாகரை பளிச்சென அடையாளம் காட்டியது.

00

Advertisment

சில படங்கள் ரிலீசாக முடியாமல் தத்தளித்தபோது, பெரிதும் உதவியிருக்கிறார் துரை சுதாகர். அப்படி அவர் உதவிசெய்யப்போன "எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?' படத்தை தனது நிலா புரமோட்டர்ஸ் பேனர்மூலம் தயாரித்து முடித்துவிட்டார். அகில், இஷாரா நாயர், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், கிருஷ்ணப்ரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் வருகிற 13-ஆம் தேதி ரிலீசாகிறது. புதுமுக இயக்குநர் கெவின் டைரக்ட் பண்ணியுள்ளார்.

இதற்கடுத்ததாக வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "டேனி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கிறார் துரை சுதாகர். இந்தப் படத்தில் நீங்க நல்ல போலீசா, கெட்ட போலீசா? என நாம் கேட்டதற்கு, ""அதெல்லாம் படத்தின் டைரக்டர்தாண்ணே சொல்லணும். நான் இப்பத்தான் சினிமாவுக்கு வந்தவன். அதனால் படத்தைப் பற்றி, டைரக்டரும் தயாரிப்பாளரும்தான் சொல்லணும்.

இனிமே தொடர்ந்து படம் தயாரிப்பீர்களா? நடிப்பீர்களா?

நமக்கு நடிப்புதாண்ணே லட்சியம். அதிலும் வில்லனா, ஹீரோவாங்கிறது முக்கியமில்ல. நமக்கான ஸ்கோப் இருக்கான்னுதான் பார்ப்பேன். கொஞ்சகாலம் ஸ்லோ & ஸ்டெடியா நம்ம வண்டி ஓடட்டும்.

Advertisment

அதுக்குப் பிறகு மெகா பட்ஜெட்டில் படம் தயாரிப்பதைப் பத்தி யோசிப்போம்ணே'' என வெள்ளந்தியாக வும் ஓப்பனாகவும் நம்மிடம் பேசினார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.