Advertisment

இதுதான் நிலைமை -ஒத்துக்கொள்ளும் நிகிலா விமல்!

/idhalgal/cinikkuttu/situation

சிலர் சினி ஃபீல்டுக்கு வருவார்கள் படபடவென்று சில படங்களைச் செய்து உச்சம்தொட்டு காணாமல் போவார்கள். சிலரோ அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைந்த அளவிலேயே படம் செய்தாலும் ஏதாவது ஒரு படம் பேசப்பட்டு ரசிகர்களின் நினைவில் நின்று நீடிப்பார்கள்.

Advertisment

அத்தகையவர்களில் ஒருவர் "தம்பி' படத்தின்மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நிகிலா விமல். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

nn

குறைந்த நேரமே தோன்றும்படியான பாத்திரங்களைச் செய்வதைக் குறித்து எப்போதாவது நீங்கள் கவலைப்பட்டதுண்டா?

Advertisment

உண்டு. "ஒரு ஏமந்தன்

சிலர் சினி ஃபீல்டுக்கு வருவார்கள் படபடவென்று சில படங்களைச் செய்து உச்சம்தொட்டு காணாமல் போவார்கள். சிலரோ அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைந்த அளவிலேயே படம் செய்தாலும் ஏதாவது ஒரு படம் பேசப்பட்டு ரசிகர்களின் நினைவில் நின்று நீடிப்பார்கள்.

Advertisment

அத்தகையவர்களில் ஒருவர் "தம்பி' படத்தின்மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நிகிலா விமல். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

nn

குறைந்த நேரமே தோன்றும்படியான பாத்திரங்களைச் செய்வதைக் குறித்து எப்போதாவது நீங்கள் கவலைப்பட்டதுண்டா?

Advertisment

உண்டு. "ஒரு ஏமந்தன் பிரேமகதா' படத்துக்குப்பின் மலையாளத்தில் நான் படமே நடிக்கவில்லை. அதில் என்னுடைய ரோல் சிறிதாக இருந்ததுதான் காரணம். அந்த ரோல் கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நினைத்தேன். இருந்தாலும் "அஞ்சாம் பதிரா'-வில் நடித்தேனென்றால், படத்தை பெரிய ஆட்களைக் கொண்ட டீம் உருவாக்கியது. எனக்கு ஒரு நாளே ஷூட்டிங் இருந்தது. சில மாதங்களுக்குப்பின் டப்பிங்குக்குக் கூப்பிட்டபோது, என்ன படத்துக்கான டப்பிங் என கேட்டேன். இதுதான் நிலைமை.

"தி பிரைஸ்ட்' படத்தில் உங்களது கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்கள்?

ஜெஸ்ஸிங்கிற டீச்சர் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறேன். ஆசிரியருக்கும் மாணவனுக் குமான வலுவான பிணைப்பை இந்தப் படம் காட்டுகிறது. படத்தில் மம்முட்டி, மஞ்சுவின் கதாபாத்திரங்களுக்கு என்னோட கதாபாத்திரத் தோடு தொடர்பு உண்டு. இது ஒரு த்ரில்லர் படம். படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் இயக்குநர் ஜோபின் டி சாக்கோ ஒருவருடத்துக்குமுன் கதையை என்னிடம் விவரித்தார். ஆனால் அதன்பின் கதையில் நிறைய மாற்றங்கள். இருந்தாலும் அந்தப் படத்தில் வாய்ப்பளித்ததை நான் எதிர்பார்க்கவேயில்லை.

"அரவிந்தாண்டே அதிதிகள்' படத்துக்குப்பின் எனக்கு பெரிய ரோல் உள்ள படம் இதுதான்.

nn

இந்தப் படத்தில் நீங்கள் மம்முட்டி.யுடன் நீண்ட நேரம் திரையில் தோன்றுவீர்கள் என கேள்விப்பட்டோமே?

ஆமாம். இந்தப் படத்தின் ஷுட்டிங்குக்கான செட்டில்தான் மம்முட்டியை நான் முதன்முதலாகச் சந்தித்தேன். புதியவள் என்பதால் நான் அவரிடம் சென்று, என் பெயர் நிகிலா என அறிமுகம் செய்துகொள்ள, என் பெயர் மம்முட்டி என அவர் அறிமுகம் செய்துகொண்டது வேடிக்கையாக இருந்தது.. மம்முட்டியுடன் வேலைசெய்தது மகிழ்ச்சியான அனுபவம். உரையாடுவதி லும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டினார். சிலசமயம் என்னை ராகிங் செய்தார். நான் பேசும்போது சில மேனரிஸங்களை, வெளிப்படுத்துவேன். அதைக் கவனித்துவிட்டு நான் இதை சில கேரக்டர்கள் பண்ணும்போது பயன்படுத்தலாமென இருக்கிறேன் என்றார். ரசிகர்கள் கவனித்த போதும் கவனிக்காவிட்டாலும் கேரக்டர்களை மேம்படுத்த சிறிதும் பெரிதுமான விஷயங்களைச் செய்தேன் என்பதை என்னிடம் விவரித்தார்.

வேறென்ன படம் தற்போது நடிக்கிறீர்கள்?

சிபிராஜுடன் "ரங்கா' படத்திலும், ஆசிப் அலி நடிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறேன்.

cini310320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe