Advertisment

தம்பிக்காக களம் இறங்கிய அக்கா!

/idhalgal/cinikkuttu/sister-brother-couple

பெரிய ஹீரோக்கள் யாருமே தங்களது மகன் சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, தங்களது கைக்காசைப் போட்டு, சொந்தமாக படம் எடுப்பதில்லை. அதேநேரம் அந்த ஹீரோவின் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்க வந்தால், கதைகேட்டு கதை கேட்டு கதற

பெரிய ஹீரோக்கள் யாருமே தங்களது மகன் சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, தங்களது கைக்காசைப் போட்டு, சொந்தமாக படம் எடுப்பதில்லை. அதேநேரம் அந்த ஹீரோவின் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்க வந்தால், கதைகேட்டு கதை கேட்டு கதறவிடுவார்கள்.

Advertisment

ஆனால், தம்பி ஹீரோவாக ஜெயிக்கவேண்டும்; ஜெயிப் பான் என்ற நம்பிக்கையுடன் அவரது அக்காவே களத்தில் இறங்கி, ஜெயித்த கதைதான் இது.

Advertisment

as

"பில்லா-2', "பிசா-2', "ஆரஞ்சு மிட்டாய்' போன்ற படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்த அசோக் செல்வன், "தெகிடி' படம்மூலம் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அதற் கடுத்து, "கூட்டத்தில் ஒருவன்' உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் அவரால் ஹீரோவாக ஜொலிக்க முடிய வில்லை. மனதளவில் ரொம்பவே அப்செட்டாக இருந்த அசோக் செல்வனுக்கு "நீ ஜெயிப்படா தம்பி' என அவரது அக்கா அபிநயாதான் நம்பிக்கை ஊட்டிக்கொண்டே இருந்தார்.

அந்த பாசக்கார அக்காவின் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆம், காதலர் தினமான பிப்.14 அன்று ரிலீசான "ஓ மை கடவுளே' படம் சூப்பர் ஹிட்டாகி, அசோக் செல்வன்மீது வாய்ப் புகள் வெளிச்சம் பாய்ச்ச ஆரம் பித்துள்ளன. அஷ்வத் மாரி முத்து டைரக்ஷனில் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் காம்பினேஷனில் ரிலீசாகியுள்ள "ஓ மை கடவுளே' எல்லா சென்டர்களிலும் ஹிட்டடித்து நல்ல கலெக்ஷனும் பார்த்துள்ளது.

cini030320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe