Advertisment

ஒத்த செருப்பு எப்படி சிறப்பு?

/idhalgal/cinikkuttu/single-chappal

ரா. பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கும் படம் "ஒத்த செருப்பு சைஸ் 7.' இப்படத்தைப் பற்றிய அறிமுகம் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பார்த்திபனின் குருவான கே. பாக்யராஜ் மற்றும் கமல், டைரக்டர் ஷங்கர் ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது. ஒ.செ.வின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் முன்னணி இயக்குநர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

Advertisment

as

""சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாத

ரா. பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கும் படம் "ஒத்த செருப்பு சைஸ் 7.' இப்படத்தைப் பற்றிய அறிமுகம் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பார்த்திபனின் குருவான கே. பாக்யராஜ் மற்றும் கமல், டைரக்டர் ஷங்கர் ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது. ஒ.செ.வின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் முன்னணி இயக்குநர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

Advertisment

as

""சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி. காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேதான்'' என அரவக்குறிச்சியில் கமல் பேசி பரபரப்பான நேரம் என்பதால், பாதுகாப்பு கருதி நிகழ்ச்சியின் அழைப்பிதழைக் கொண்டுவந்தால்தான் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி என்றார்கள்.

புதுமைப் பித்தரான பார்த்திபன், இந்த "ஒத்த செருப்பு' படத்திலும் புதுமை செய்திருக்கிறார். ""இப்படம் பல விருதுகளைப் பெறும்'' என வாழ்த்தினார் கமல். டைரக்டர்கள் ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உட்பட அனைவரும் பார்த்திபனின் திறமையை புகழ்ந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினி, இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோரும் பார்த்திபனை வாழ்த்திப் பேசிய வீடியோ காட்சியும் ஒளிபரப்பப் பட்டது.

கே. பாக்யராஜ் பேசும்போது, ""ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே நடித்துள்ள படங்கள் இதுவரை உலக அளவில் 12 வந்துள்ளன. ஆனால், இந்த "ஒத்த செருப்பு'-வைப் பொருத்தவரை, பார்த்திபனே கதை எழுதி, தயாரித்து இயக்கியுள்ளதால் அந்த 12 படங்களைவிட சிறப்பு வாய்ந்தது'' என பாராட்டினார்.

இந்த ஒத்த செருப்பின் சிறப் பால் இன்னொருவரின் சிறப்பு இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளதாக கோடம்பாக் கத்தில் கூடிக்கூடிப் பேசுகி றார்கள். அவர்கள் பேச்சின் சாராம்சம் இதுதான். "வெங்காயம்' என்ற படத்தை சங்ககிரி ராஜ்குமார் டைரக்ட் பண்ணினார். அதற்கடுத்து "ஒன்' என்ற படத்தில் இவர் மட்டுமே நடிக்கிறார். "ஒத்த செருப்பு' படத்திலாவது இசை, ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் என பலரின் பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் "ஒன்' படத்தில் எல்லாமே சங்ககிரி ராஜ்குமார்தான். கின்னஸ் சாதனைக்காக இந்தப் படம் எடுக்கப் பட்டிருப்பதால், படத்தின் துவக்கம்முதல் இறுதிவரை மேக்கிங் விஷயங்கள் அனைத்தையும் மற்றொரு கேமராவில் படம் பிடித்துள்ளாராம் சங்ககிரி ராஜ்குமார். அதேபோல் படத்தில்வரும் மற்ற சில கேரக்டர்களிலும் ராஜ்குமாரே நடித்து அதை மோசன் கேப்சர் டெக் னாலஜியில் ஷூட் செய்திருக்கிறார் ராஜ்குமார் என்கிறார்கள் விவரமாக.

சங்ககிரி ராஜ்குமார் சாதாரண ஆள் என்பதால் இருட்டடிப்பு செய்கிறார் களோ என்னவோ?

-ஈஷ்

Advertisment
cine040619
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe