தமிழ் சினிமாவின் தற்போதைய வைரல் குரலாகியிருக்கிறது பின்னணி பாடகர் ஜெகதீஷின் குரல். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான "சொன்னா புரியாது' படத்தின்மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான ஜெகதீஷ், தொடர்ந்து "காஞ்சனா 2', "கொடிவீரன்', "ஹலோ நான் ப
தமிழ் சினிமாவின் தற்போதைய வைரல் குரலாகியிருக்கிறது பின்னணி பாடகர் ஜெகதீஷின் குரல். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான "சொன்னா புரியாது' படத்தின்மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான ஜெகதீஷ், தொடர்ந்து "காஞ்சனா 2', "கொடிவீரன்', "ஹலோ நான் பேய் பேசுறேன்', "ஜுங்கா', "காளி' உள்ளிட்ட பல படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இசையமைப் பாளர்கள் சத்யா, என்.ஆர். ரகுநந்தன், சித்தார்த் விபின், அம்ரீஷ், ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிவரும் ஜெகதீஷ், "சார்லி சாப்ளின்- 2' படத்தில் அம்ரீஷ் இசையில் பாடியுள்ள ""ஐ வாண்ட் டூ மேரி மாமா...'' என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவி மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.
மெலோடியாகட்டும், குத்துப் பாடலாகட்டும், தனது காந்த குரலால் பாடல்களை மக்கள் மனதில் பதியவைத்துவிடும் பாடகர் ஜெகதீஷ், ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் இசைப் பள்ளியில் பயின்றவர். மேலும், ரஹ்மான் இசையமைத்த பல பக்தி ஆல்பங்களில் பாடி அவரிடம் பாராட்டும் பெற்றுள்ளார். ""விரைவில் ரஹ்மான் சாரின் இசையில் சினிமாவில் பாடுவேன், என்று நம்பிக்கையோடு கூறும் ஜெகதீஷ், யுவன்சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், சாம் சி.எஸ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடவேண்டும் என்பதை தனது கனவாக வைத்திருக்கிறார்.