Advertisment

சிம்பு அப்படித்தான் இருப்பான் -உஷா ராஜேந்தர் அதிரடி!

/idhalgal/cinikkuttu/simbu-will-be-usha-rajender-action

ss"ரகளை சிம்பு! ரணகள டி.ஆர்.!' என்ற தலைப்பில் கடந்த "சினிக்கூத்து' இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, மைக்கேல் ராயப்பன், "எஸ்கேப் ஆர்டிஸ்ட்' மதன் ஆகியோர், சிம்புவுக்கு கொடுத்த அட்வான்சை திருப்பிக்கேட்டு பஞ்சாய

ss"ரகளை சிம்பு! ரணகள டி.ஆர்.!' என்ற தலைப்பில் கடந்த "சினிக்கூத்து' இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, மைக்கேல் ராயப்பன், "எஸ்கேப் ஆர்டிஸ்ட்' மதன் ஆகியோர், சிம்புவுக்கு கொடுத்த அட்வான்சை திருப்பிக்கேட்டு பஞ்சாயத்தை கூட்டியிருப்பதாக அந்த செய்தியில் சொல்லிலிஇருந்தோம்.

Advertisment

சிம்புவின் தந்தையான டி.ஆரும் ஒரு கட்டத்தில் ஏடாகூடமாகவும் கடுப்பாகவும் பேச ஆரம்பித்ததும் எரிச்சலாகிவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள். இனிமேல் டி.ஆரிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் சிம்புவின் அம்மாவான உஷாவிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

Advertisment

""ஏங்க நாங்க கொடுத்த அட்வான்ஸு...'' என தயாரிப்பாளர்கள் ஆரம்பித்ததுமே, என்னோட மகன் நடிகன் மட்டுமல்ல; பாடலாசிரியர், இசையமைப்பாளர், டைரக்டர், டான்ஸ் மாஸ்டர், பின்னணிப் பாடகர்னு அவனோட அப்பாவைப் போலவே பல்துறை வித்தகன். மதியத்துக்குமேல ஷூட்டிங்கிற்கு வருவான். இஷ்டப்பட்டா நடிப்பான், இல்லேன்னா கிளம்பிருவான். இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தானே அவனை புக் பண்றீங்க.

ss

அதனால் அட்வான்ஸ் அப்படியே இருக்கட்டும். உங்களுக்கு விருப்பம் இருந்தா அவனை வச்சு படம் எடுங்க, இல்லேன்னா எங்க சௌகரியப்படிதான் அட்வான்ஸை திருப்பிக் கொடுப்போம்'' என உஷா ராஜேந்தர் அதிரடியாக தீர்ப்பு சொன்னதும் தயாரிப்பாளர்களுக்கு மாரடைப்பே வந்துவிட்டதாம்.

-பரமேஷ்

cini170919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe