"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம்மூலம், அறிமுகமான நாயகி ஷ்ரின் கன்ஞ்வாலா தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்து, ரிலீசாகியுள்ள "வால்டர்' படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.
ஷ்ரின் கன்ஞ்வாலா என்ன சொல்றாருன்னா...
""இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையைக் கூறியபோது... கலந்து கட்டிய உணர்வுகளால் பிரமித்துப்போனேன்! பலவகை திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தின் கதையில்வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தன என்பது அதிர்ச்சிதருவதாக இருந்தது.
எதிர்பாராதவிதமாக, நான் சமூக நோக்குடன்கூடிய அழுத்தமான படங்களில் தொடர்ந்து பணிபுரிகிறேன். அது மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. படத்தின் மையம் மிக அழுத்தமான விஷயத்தை பதற்றம் தரும் வகையில் கூறுவதாக இருந்தாலும், ரொமான்ஸும் சரியான அளவில் வருவதுபோல திரைக்கதை அமைத்துள்ளார் டைரக்டர்.
சாதாரணமாக, இந்த வகைத் திரைப்படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது.
ஆனால், இப்படத்தில் இயக்குநர் எனக்கு மிகச் சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார். இப்படியான முக்கியத்துவம் மிகுந்த படைப்பில் நானும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி. சிபிராஜ் ஒரு அற்புதமான நடிகராக, எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். தமிழின் சிறந்த நடிகர்களான நட்டி, சமுத்திரகனி, ரித்விகா மற்றும் பலருடன் நடித்தது ஒரு மிகச் சிறந்த அனுபவம்'' என்கிறார் சிலிர்ப்புடன்.