பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கிறதாம்.

அடுத்தடுத்து அவருக்குக் கிடைக்கிற வாய்ப்புகள் வித்தியாசமாகவே இருக்கின்றன.

கடைசியாக நடித்த "ஸ்ட்ரீ' படம் திகில் காமெடியாக அமைந்தது. இந்திக்கு புதுசான இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 130 கோடி என்கிறார்கள். 24 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மலைக்க வைக்கும் வசூல், ஷ்ரத்தா கபூரின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி இருக்கிறது.

sharadhakapur

Advertisment

""எனக்கு சினிமா வியாபாரம் தெரியாது.

எனக்குக் கிடைக்கிற கேரக்டரை எப்படி செய்வது என்பதில் மட்டுமே கவனமாக இருப்பேன். எனது படம் வெளியாகிறது என்றால், ரசிகர்கள் எனது கதாபாத்திரத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதைத்தான் பார்ப்பேன். ஒரு படத்தைப் பற்றி கடுமையாக விமர்சிக் கிறார்கள் என்றால் அதிலிருந்து நான் கற்றுக் கொள்ளத்தான் நினைப்பேன். நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்தாலும், எனக்கு ஒவ்வொரு படமும் கற்றுக் கொள்வதற்கான பாடம்தான்'' என்று பவ்யமாக சொல்கிறார் ஷ்ரத்தா கபூர்.