shortfilms

கு.ப. 1

Advertisment

நாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, உளவியல் சிக்கலை, அவன் எதிர்கொள்ளும் போராட்டத்தினை அழகாக, கலகலப்பாக, சுவாரஸ்ய மாகச் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் ஷா. அந்தக் கதை நாயகன் தன் முடி வளர பலவகை மருந்துகள், மூலிகை கள், ஷாம் பூக்கள் எல்லாம் போட்டு பலனின்றி ""மயிரோடு வந்தால்தான் உயிரோடு வருவேன் ""என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான்.

யாரோ சொன்னதை நம்பி முடி வளரக் கருங்குரங்கு ரத்தம் உதவும் என்று அதைத்தேடி காட்டுக்குள் செல் கிறான். அங்கே தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறான். முடிவு என்ன என்பதே "ஒரு மயிரும் இல்ல' படத்தின் க்ளைமாக்ஸ்.

கு.ப.2

""நாட்டில் நிகழும் ஊழல்களையும் ஊழலைச் செய்தவர்கள் விடுதலையாகி வெளிவருவதையும் பார்த்த ஒரு சராசரிக் குடிமகனின் சீற்றமாக இருக்கும் குறும் படம்தான் "செருப்படி வைத்தியம்.'

Advertisment

தெரியாமல் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை தரலாம். இப்படித் தெரிந்தே ஊழல் தவறுகள் செய்பவர் களுக்குச் செருப்படி கொடுத்து அவர்களின் தன்மானத்தைக் குலைத்தால்தான் மீண்டும் ஊழல் செய்யப் பயம் வரும் என்று போகிறது கதை.

இந்த இயக்குநர் மலைமன்னன் என்பவர் ஏற்கெனவே நான்கு குறும்படங்கள் இயக்கி நான்கை யும் ஒரேசமயத்தில் ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டரில் பிரிவியூ செய்தவர். "ஆரம்பமே அட்டகாசம்' படத்தில் பாடல்களை எழுதியவர். ஊழல் ஒரு பாவச் செயல்; ஊழல் ஒரு பெருங்குற்றம்; ஊழல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்' என்று பொட்டில் அடித்தாற்போல சொல்கிறது இக் குறும்படம்.

கு.ப. 3

யூடியூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூடியூபில் வலையேற்றப்பட்ட "அப்பா காண்டம்' குறும்படம் ஐந்து நாட்களில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இயக்குநர் ஆர்வாவிற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகர் மற்றும் ஹரிஷ் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்கள்.

இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர்.

இந்தி திரைப்படம் பொறுப்புள்ள நவீனகால அப்பா, பாதை மாறும் பையனுக்கு எவ்விதமாக ஆலோசனைகள் வழங்குகின்றார் என்பதே இந்த திரைப்படத்தின் மையக்கரு.

""காண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம். பொதுவாக காண்டம் என்றால் ஒரு குழப்பமான சூழ்நிலை யில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள். இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை'' என்று இயக்குநர் ஆர்வா, காண்டத் திற்கான விளக்கத்தை சொன்னார்.

பி.ஆர்.ஓ. தியாகராஜன், விஷ்ணுகுமார் மற்றும் பிரதாப் இணைந்து "அப்பா காண்டம்' குறும்படத்தை தயாரித்து வழங்கியுள்ளார்கள்.