Advertisment

சிவா- நயன்- சிவன்! "அண்டர் டீலிங்' ஐஸ்வர்யா ராஜேஷ் அப்செட்!

/idhalgal/cinikkuttu/shiva-nayan-shiva-under-tealing-aishwarya-rajesh-abset

ராஜேஷ் எம். டைரக்ஷனில் சிவகார்த்திகேயன்- நயன்தாரா ஜோடி போடும் "மிஸ்டர் லோக்கல்' படத்தின் ஷுட்டிங் 90% முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி. இதற்கிடையே "இரும்புத்திரை' பி.எஸ். மித்ரன், "நேற்று இன்று நாளை' ரவிக்குமார் ஆகியோரது டைரக்ஷனில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன்.

Advertisment

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப் பில் பாண்டிராஜ் டைரக்ஷனிலும் கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் எம். டைரக்ஷனில் சிவகார்த்திகேயன்- நயன்தாரா ஜோடி போடும் "மிஸ்டர் லோக்கல்' படத்தின் ஷுட்டிங் 90% முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி. இதற்கிடையே "இரும்புத்திரை' பி.எஸ். மித்ரன், "நேற்று இன்று நாளை' ரவிக்குமார் ஆகியோரது டைரக்ஷனில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன்.

Advertisment

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப் பில் பாண்டிராஜ் டைரக்ஷனிலும் கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Advertisment

சிவகார்த்திகேயன் தயாரித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த "கனா'-வின் கதை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை "மித்ரன்' படத்தில் சிவாவுக்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சிவாவோ, "கனா'-வில் ஐஸ்வர்யா ராஜேஷின் உழைப்பு கடுமையாக இருந்ததை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் எனக்கு ஜோடியாக அவர் நடிக்க கொஞ்சம் தயக்கமா இருக்கு. அதனால் அவரைவிட பெரிய ஹீரோயினான ரகுல் ப்ரீத்சிங்கையோ, ராஷி கண்ணா வையோ, கீர்த்தி சுரேஷையோ ஹீரோயினா போடலாமே'' என்றிருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அப்செட் டானாலும் நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.

இதற்கிடையே தனது லவ்வர் விக்னேஷ் சிவனுக்காக சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டைக் கைப்பற்றிவிட்டார் நயன்தாரா. நயன் மூலமாக சிவாவின் கால்ஷீட் கிடைத்ததால் சூப்பர் ஹேப்பியாக இருக்கும் லைக்கா சுபாஷ்கரன், லம்பாக ஒரு தொகையை நயனுக்கு கொடுத்தி ருக்கிறார். தான் ஹீரோவாக வளர்ந்துவந்த நேரத்தில் "வேலைக் காரன்' படத்தில் தனக்கு ஜோடி யாக நடிக்க நயன் ஒப்புக்கொண்டதை இப்போதும் பூரிப்புடன் சொல்லி மகிழ்வார் சிவகார்த்திகேயன்.

nayan

அதேபோல் இப்போதும் ரஜினி, விஜய், அஜீத் என மெகா ஸ்டார்களுடனும் அவரது மார்க்கெட் வேல்யூவிற்காகவே எடுக்கப்பட்ட "ஐரா' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், "மிஸ்டர் லோக்கல்' படத்தில் நயன் தனக்கு ஜோடியானதில் சிவகார்த்திகேயன் செம ஹேப்பி.

அந்த ஹேப்பியான நன்றிக்காகத்தான் நயனின் லவ்வர் சிவன் டைரக்ஷனில் நடிக்க கால்ஷீட் கொடுத் துள்ளார் சிவா. இதற்கி டையே விக்னேஷ் சிவனும் மீண்டும் சூர்யாவை வைத்து டைரக்ட் பண்ணும் முயற்சியில் இறங்கிப் பார்த்தார். ஆனால் "தானா சேர்ந்த கூட்டம்' தந்த அனுபவத்தால், சிவனுக்கு நோ கால்ஷீட் எனச் சொல்லி விட்டாராம் சூர்யா.

keerthi

சிவகார்த்திகேயன் படத்தை சின்சியரா எடுத்து மார்க்கெட்டை தக்கவச்சுக்கு மாறு லவ்வர் சிவனுக்கு அன்பான அட்வைஸ் பண்ணியுள்ளாராம்.

-ஈ.பா. பரமேஷ்வரன்

cine020419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe