"குயீன்' படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறார்.

Advertisment

shootover

தமிழில் "பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் "தட்ஸ் மஹாலக்ஷ்மி', கன்னடத்தில் "பட்டர்ஃப்ளை', மலையாளத்தில் "ஜாம் ஜாம்' என படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குநரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.

Advertisment

tamana

ஐரோப்பாவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

""படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக வுள்ளது'' என்கிறார் தயாரிப் பாளர் மனுகுமரன்.

Advertisment

இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் "பட்டர்ப்ளை' படத்தின் நாயகியுமான பருல் யாதவ் கூறுகையில், ""இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களைத் தயாரிக்கும் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தி யளிப்பதாகவுள்ளது''என்றார்.

நான்கு மொழிகளிலும் அக்டோபர் மாதம் ரிலீசாகிறது.