ரஜினி-ஐஸ்வர்யா ராய்-டைரக்டர் ஷங்கர் காம்பினேஷனில் 2010 அக்டோபர் மாதம் ரிலீசானது "எந்திரன்.' படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியானார் "நக்கீரன்' முதன்மைத் துணை ஆசிரியரும் "இனிய உதயம்' இலக்கிய மாத இதழின் இணை ஆசிரியருமான ஆரூர் தமிழ்நாடன். காரணம் 1996-ஆம் ஆண்டே "இனிய உதயம்' இதழில் "ஜூகிபா' என்ற தலைப்பில் எழுதியிருந்த கதையின் அப்பட்டமான காப்பிதான் "எந்திரன்'.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shankar.jpg)
இதனால் படம் ரிலீசான 2010-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஷங்கர்மீது வழக்கு தொடர்ந்தார். நீதியரசர் பாரதிதாசன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஷங்கர் தரப்பில் இருக்கும் ஆதார ஆவணங்களை மாஸ்டர் கோர்ட்டில் தாக்கல் செய்து, 2018 ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு முன்பாக சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/enthiran.jpg)
ஆனால் ஷங்கர் ஆஜராகாமல், தனது உதவி இயக்குனரை சாட்சியம் அளிக்க அனுப்பினார். இதற்கு ஆரூர் தமிழ்நாடன் தரப்பு வக்கீல்களான எல். சிவகுமார், சதீஷ், இளங்கோவன் ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்த னர். இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி நீதியரசர் சி.வி.கார்த்திகேயன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ""டைரக்டர் ஷங்கர் ஷூட்டிங்கில் இருப்பதாக அவரது வக்கீல் காரணம் சொன்னார். அவர் ஷூட்டிங் கில் இருந்தால், நீதிமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு போக முடியுமா?'' என சாட்டையடி கொடுத்ததோடு, ஆகஸ்ட்-01-ஆம் தேதி ஷங்கர் கண்டிப்பாக ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
-பரமேஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/shankar-t.jpg)