Advertisment

ஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்!

/idhalgal/cinikkuttu/shakilas-acting-tips

சூப்பர் செக்ஸ் மாஸ் ஹீரோயின் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகிக் கொண்டிருக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த ஹீரோயின் ரிச்சா சதா ஷகீலாவாக நடிக்கிறார்.

Advertisment

shakila

சமீபத்தில் பெங்களூர் சென்ற ஷகீலா, ரிச்சா

சூப்பர் செக்ஸ் மாஸ் ஹீரோயின் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகிக் கொண்டிருக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த ஹீரோயின் ரிச்சா சதா ஷகீலாவாக நடிக்கிறார்.

Advertisment

shakila

சமீபத்தில் பெங்களூர் சென்ற ஷகீலா, ரிச்சாவைச் சந்தித்து, ""கேரள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலின் படங்களையே மண்ணைக் கவ்வ வைத்தேன். என்னோட "பாடி சைஸ்' பலபேரை பைத்தியமாக்குச்சு. என்னதான் செக்ஸ் குயினா இருந்தாலும் என்னோட வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத சோகங்கள் நிறைய உள்ளன.

என்னோட கதையில் நடிப்பதால் இந்தப்பட ரிலீசுக்குப் பிறகு உங்களையும் ஒரு "மாதிரி'யா பார்ப்பார்கள். அதனால உஷாரா இருக்கணும். ஏதாவது டவுட் டுன்னா, எந்த நேரமானாலும் என்னை கான்டாக்ட் பண்ணலாம்'' என மனம் திறந்து பேசிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஷகீலா.

ஷகீலாவின் திறந்த மன பேச்சைக் கேட்டு நெகிழ்ந்த ரிச்சா சதா, கடந்த வாரம் சென்னை வந்து ஷகீலாவைச் சந்தித்தார். எசகுபிசகான, ஏடாகூடமான சீன்களில் எப்படி "நடிப்பது'(?!) என்பது குறித்து பயனுள்ள டிப்ஸ்களை ஷகீலா விடமிருந்து பெற்றுக்கொண்டு, பரம திருப்தியுடன் பெங்களூரு திரும்பியிருக் கிறார் ரிச்சா சதா.

Advertisment

cine201118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe