ல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே (அப்படியா? இது தெரியாமப் போச்சே நமக்கு!) குறிக்கோளாகக் கொண்டு படங்களைத் தேர்வுசெய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவரத் (ஆத்தாடி ஆத்தோவ்) துவங்கியுள்ளன.

ss

இரண்டரை ஆண்டுகளுக்குமுன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான "பச்சமாங்கா' (கேட்சிங்கான டைட்டில்தான்) என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் (அடடே!) பெற்றுள்ளது. இந்நிலையில், ட்ரைலரில் நடிகை சோனா வின் ssகவர்ச்சியான உடை குறித்து பலரும்... "சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார்' என்று செய்தியை (அப்சல்யூட்லி கரெக்ட்) பரப்பிவருகிறார்கள். ஒரு பிரபல தமிழ் நாளிதழ்கூட ""ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்'' என்பது போன்ற செய்தியை வெளியிட்டுள்ளதாம். மேலும், இப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப் பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா, தான் இனி கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை (வாட் எ சினிமா மிராக்கிள்) என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்தப் "பச்சமாங்கா' படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட படமாக இருந் தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? (இது என்னடா புது புரளியா இருக்கு?) என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் சொல்ல வருவது...

"""பச்சமாங்கா' படம் ஒரு கனமான(??!!) கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலுமகேந்திரா சார் படம்போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர்நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப் படத்தை என் உடைமூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம். இது மிகச் சிறப்பான படம்.

Advertisment

sona

என் கதாபாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்'' என்கிறார் படம் வந்தபிறகு சொல்லிட்டாப் போச்சு!