Advertisment

சென்சார் எதிர்ப்பு! காஜல் கடுப்பு!

/idhalgal/cinikkuttu/sensor-resistance-kajal-neck

ந்தியில் கங்கனா ரனவத் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் "குயின்.' இந்த குயின்தான் இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரீமேக்காகி யிருக்கிறது. நான்கு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரிப்பவர் மீடியண்ட் பிலிம் மனுகுமரன்.

Advertisment

தமிழில் "பாரீஸ் ப

ந்தியில் கங்கனா ரனவத் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் "குயின்.' இந்த குயின்தான் இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரீமேக்காகி யிருக்கிறது. நான்கு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரிப்பவர் மீடியண்ட் பிலிம் மனுகுமரன்.

Advertisment

தமிழில் "பாரீஸ் பாரீஸ்' என்ற டைட்டிலுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார். தெலுங்கில் "தட்ஸ் மகாலட்சுமி' என தமன்னாவும் கன்னடத்தில் "பட்டர்ஃபிளை' என பாருல் யாதவ்வும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் "ஜாம் ஜாம்' என்ற பெயரிலும் தயாராகி முடிந்துள்ளது.

Advertisment

ggg

தமிழ் மற்றும் கன்னடத்தின் டைரக்டர் ரமேஷ் அரவிந்த். படத்தை முழுவதுமாக முடித்து சென்சாருக் கும் அனுப்பினார் தயாரிப்பாளர். மற்ற மூன்று மொழிகளின் சென்சார் அதிகாரிகள் படத்தைப் பார்த்துவிட்டு சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். ஆனால் தமிழ் "பாரீஸ் பாரீஸ்' படத்திற்கு மட்டும் ஏகப்பட்ட சீன்களில் ஆடியோவை கட் பண்ணியும் சில சீன்களை வெட்டியெறிந்தும், பல சீன்களை டல்லாக்கியும் விட்டார்கள்.

அத்துடன் விட்டாலும் பரவாயில்லை; படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி விட்டார்களாம். ரிவைசிங் கமிட்டியில் எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தயாரிப் பாளர் இருந்தாலும் நான்கு மொழி பட்ஜெட் டால் ரொம்பவே கிறுகிறுத்துப் போய் இருக்கிறாராம் மனுகுமரன்.

பணம் போட்ட தயாரிப்பாளருக்கு அந்த நிலைமை என்றால், பணம் வாங்கி நடித்த காஜல் அகர்வாலோ, ""மத்த லாங்குவேஜுலை யெல்லாம் பிரச்சினை வராதபோது, என் படத்திற்கு மட்டும் சென்சார் ஏன் இவ்வளவு எதிர்ப்பு காட்டுறாங்க'' என கடுப்பில் இருக்காராம்.

-பரமு

cini170919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe