ஸ்.எஸ்.ஆர். ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா ஆர்.சி. நாயகியாக நடிக்க "ஜித்தன் 2' படத்தை இயக்கிய ராகுல் பரமஹம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள "கருத்துகளை பதிவு செய்' படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைத்தளங்களில் உருவாகும் காதல் பொய்யானது என்பதும், அதன்மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப் படுகிறார்கள் என்பதும்தான் கதை. அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார் என்பதே இந்த "கருத்துகளை பதிவு செய்', படத்தைப் பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி, ""இம்மாதிரியான படங்கள் இந்தகால தலைமுறைக்கு அவசியம் என்று பாராட்டி எனக்கு வாழ்த்து கூறினார்'' என்கிறார் இயக்குநர் ராகுல் பரமஹம்சா.

Advertisment

censor

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு- ஆர்.பி.எம். சினிமாஸ், கதை, திரைக்கதை, வசனம்- ராஜசேகர், இசை- கணேஷ் ராகவேந்திரா, பின்னணி இசை- பரணி, பாடல்கள்- சொற்கோ, எடிட்டர்: கணேஷ் டி., ஒளிப்பதிவாளர்- மனோகரன்.

நவம்பர் மாதம் வெளியாகிறது இப்படம்.