"தயாரிப்பாளர்- ஹீரோ நிஜ ஃபைட்' என்ற தலைப்பில் கடந்த "சினிக்கூத்து' இதழில் அட்டைப்படச் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ராகவா லாரன்சை தாக்கி, ஓப்பனாக மிரட்டி கடுமையான அறிக்கை வெளியிட்டிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தோம். "நான் சீமானின் தம்பி' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் சுரேஷ் காமாட்சி.
""ஏழைகளுக்கு நல்லது செய்யும் ராகவா லாரன்சை, சீமானின் தம்பி என்ற பெயரில் மிரட்டும் சுரேஷ் காமாட்சியை வன்மையாக கண்டிக்கிறோம். இனிமேலும் இது தொடர்ந்தால் அவ்வளவுதான் தொலைச் சுப்புடுவோம், தொலைச்சு'' என்று நாக்கைத் துருத்தி, சுட்டு விரலை உயர்த்திக் காட்டி ஒப்பனாகவே எச்சரித்திருக்கிறார்கள் திருநங்கைகள்.
"காஞ்சனா-3'-யின் ஒட்டுமொத்த ரைட்சை சன் டிவி வாங்கியிருந்தாலும் "தெலுங்கு ரைட்சை மட்டும் ராகவா வாங்கி, 70 கோடிக்கு விற்றுள்ளார். படத்தின் மொத்த பட்ஜெட்டே 12 கோடிக்குள் அடங்கிவிட்டதாம். தெலுங்கில் மட்டுமல்ல; தமிழிலும் "காஞ்சனா-3' தாறுமாறு ஹிட் அடித்திருப்பதால் செம ஹேப்பியாக இருக்கும் ராகவா லாரன்சுக்கு சுரேஷ் காமாட்சிதான் பெரிய இம்சையாக இருக்கிறாராம்.
-தர்பூசணி