Advertisment
/idhalgal/cinikkuttu/seemadurai

புவன் மீடியா ஒர்க்ஸ் சார்பில் இ. சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், "சீமத்துரை'.

Advertisment

seemadurai

கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி

புவன் மீடியா ஒர்க்ஸ் சார்பில் இ. சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், "சீமத்துரை'.

Advertisment

seemadurai

கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், "கயல்' வின்சென்ட், மகேந்திரன், "சுந்தர பாண்டியன்' காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

""ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.

அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட கர்வம் ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும்தான் "சீமத்துரை' படத்தின் கதை'' என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். டி. திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, "மேயாத மான்' படத்தின் தங்கச்சி பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை "பிச்சைக்காரன்' படத்தின் படத்தொகுப்பாளரான ப.டி. செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை "மரகத நாணயம்' படத்தின் கலை இயக்குநர் என்.கே. ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.

cini210818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe