Advertisment

உத்ரா கல்யாண ரகசியம்

/idhalgal/cinikkuttu/secret-udra-kalyana

ட்டப்பாறை கிராமத்திற்கு தங்களது கல்லூரி புராஜக்ட் ஒர்க்குக்காகச் செல்கிறார்கள் மூன்று கல்லூரி ஜோடிகள்.

Advertisment

அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை. சந்தோஷம் இல்லை. ஏன் திருமணம் நடந்தே சில வருடங்கள் ஆகின்றன.

Advertisment

அப்படி மீறி திருமணம் நடந்தாலும், அந்த புது கணவன்- மனைவி அன்றிரவே ஒரு அரூபத் தால் கொலை ச

ட்டப்பாறை கிராமத்திற்கு தங்களது கல்லூரி புராஜக்ட் ஒர்க்குக்காகச் செல்கிறார்கள் மூன்று கல்லூரி ஜோடிகள்.

Advertisment

அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை. சந்தோஷம் இல்லை. ஏன் திருமணம் நடந்தே சில வருடங்கள் ஆகின்றன.

Advertisment

அப்படி மீறி திருமணம் நடந்தாலும், அந்த புது கணவன்- மனைவி அன்றிரவே ஒரு அரூபத் தால் கொலை செய்யப்பட்டு விடுவதாகக் கூறுகிறார்கள்.

dd

இதை மூடநம்பிக்கை என கல்லூரி ஜோடிகள் நிரூபிக்க, தங்களுக்குள் ஒரு ஜோடியைத் திருமணம் செய்வதுபோல் நாடகமாடுகிறார்கள். தங்களுக்கு எதுவும் நேரவில்லை என அந்த ஊர்மக்களை நம்ப வைக்கிறார்கள். அதை நம்பிய கிராமத்து மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்குத் திருமணம் செய்துவைக்க, அந்த புது கணவன்- மனைவி அன்றிரவே ஒரு அரூபத்தால் கொலை செய்யப் படுகிறார் கள். அது யார்? ஏன் என கல்லூரி ஜோடி கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இயங்கும்போது...

அது, அந்த கிராமத்தில் ஒரு அம்மனின் பக்தையாக வாழ்ந்த உத்ரா என்ற பெண்ணின் சாபத்தால் என தெரியவருகிறது. அந்த சாபத்தை நீக்க, உத்ராவையும் அவள் காதலனையும் கொன்ற வில்லன் மாசியை அந்த ஊர் எல்லைக்குள் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் கல்லூரி ஜோடிகள்.

yy

ஆனால், எந்த அம்மனுக்காக வாழ்ந்தாளோ, அந்த அம்மனே, உத்ரா ஒரு இறந்த ஆத்மா என தன் சந்நிதிக்குள் அனுமதிக்க மறுக்கிறது.

அதனால் அம்மனுக்கும் உத்ராவிற்கும் நடக்கும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஆவி உருவமான உத்ராவைக் கொல்ல மாசியை அம்மன் அனுமதித்தாளா? கல்லூரி ஜோடிகள் உதவியுடன் உத்ரா, மாசியைக் கொன்றாளா.. என்பது "உத்ரா' திரைப்படத்தின் விறுவிறுப்பான கிளைமாக்ஸ்...

சி. ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்தை "நெல்லை சந்திப்பு' படத்தின் டைரக்டர் நவீன்கிருஷ்ணா இயக்கியுள்ளார். அம்மன் பக்தையாக கௌசல்யா, இளம்ஜோடி களாக விஸ்வா, விஸ்வந்த், ரக்ஷா, ரோஹினி, சினேகா நாயர் நடித்துள்ளனர்.

cini171219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe