டந்த 2017-ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம், "மெரினா புரட்சி' என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ். ராஜ் இயக்கியுளார். யூ டியூப் 'புட் சட்னி' புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

Advertisment

ac

இந்தப்படம் தணிக்கை அதிகாரி களால் சான்றிதழ் வழங்க மறுக்கப் பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளைத் தட்டி ஒருவழியாக சென்சார் "யு' (ம) சான்றிதழ் பெற்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த வலிமிகுந்த பயணம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ராஜ் பல விறுவிறுப் பான ரகசிய தகவல் களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

""இந்த ஜல்லிக் கட்டுக்கு தடை கேட்டது யார்?

Advertisment

அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன? இந்த போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன? அதை இளைஞர்கள் சாமர்த்தியமாக எப்படி முறியடித்தார்கள்? கடைசி நாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கி றார்கள் என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில், தீவிரமாகப் புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கி யுள்ளோம்..

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா என்றும், நாட்டு மாடுகளை அழிப்பதுதான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பீட்டாவின் நோக்கம் அதுவல்ல. பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக.

d

Advertisment

அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது..? அந்த பணத்தைக் கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர்- நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள்? அதன்மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப்படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளோம்.

இதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை இதில் அடையாளம் காட்டியுள்ளோம்.... அவரைப்பற்றிய உண்மை தெரியவரும்போது படம் பார்ப்பவர்களுக்கு "இவரா அவர்...' என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும். காரணம் ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

jஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னணியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை. குறிப்பாக நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என கூறி முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள்தான்..

அவர்கள் யாரென்பதை இதில் பகிரங்கப்படுத்தி இருக்கிறோம்.

இதனாலேயே இந்தப்படத்திற்கு இங்கே சென்சார் சான்றிதழ் தரவே மறுத்தார்கள். மறு சீராய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே படம் பார்த்த நடிகை கௌதமியும் இதேபோன்று சில காரணங்களை சொல்லி கையை விரித்துவிட்டார்.

வேறுவழியின்றி நீதிமன்றத்தின் கதவைத் தட்டினோம்.. இந்த வருடம் ஜனவரி 7-ஆம் தேதி படத்தைப் பார்த்துவிட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆனால், ஜனவரி 17-ஆம் தேதி இரண்டாவது மறுசீராய்வு குழு, நடிகை ஜீவிதா தலைமையில் படத்தைப் பார்த்துவிட்டு சில காட்சிகளை நீக்கும்படி கூறினார்கள். இந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் மத்திய அரசு என்கிற வார்த்தை வரும் இடங்களை எல்லாம் "ம்யூட்' செய்யக் கூறிவிட்டனர். அப்படி சுமார் 18 இடங்களில் நாங்கள் "ம்யூட்' செய்துள்ளோம்.

அதன்பிறகும் உடனே சான்றிதழ் அளிக்காமல் காலம் தாழ்த்தி... இதோ இப்போது மே மாதம்தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

எங்களுடைய நீண்டநெடிய போராட்டத்தின் பயனாக இதோ இந்த மே மாத இறுதி யில் படத்தை ரிலீஸ் செய்யத் தயாராகி வருகிறோம். 82 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம், காலகாலத்திற்கும் உலகமே வியந்து பார்த்த நம் தமிழர்களின் மெரினா போராட்டம் குறித்த நினைவலைகளை அடுத்துவரும் தலைமுறையினர் மத்தியில் எழுப்பிக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு வரலாற்றுப் பதிவாக இந்தப்படம் இருக்கும்'' என உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சொல்கிறார் இயக்குநர் எம்.எஸ். ராஜ்.