Advertisment

சயீஷா தொழில் ரகசியம்!

/idhalgal/cinikkuttu/secret-sahesha-industry

மாஜி இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி சயீஷா சைகல், தெலுங்கு சினிமா வில் என்ட்ரியாகி, அதன்பின் தமிழில் ஏ.எல். விஜய் டைரக்ஷனில் "ஜெயம்'ரவி ஜோடியாக "வனமகன்' படத்தில் அறிமுகமானார். முதல்பட ரிசல்ட் பரவாயில்லை ரகம் என்றாலும் தெலுங்கைவிட தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சயீஷா.

Advertisment

saysha

இரண்டாவது படம் ஆர்யா

மாஜி இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி சயீஷா சைகல், தெலுங்கு சினிமா வில் என்ட்ரியாகி, அதன்பின் தமிழில் ஏ.எல். விஜய் டைரக்ஷனில் "ஜெயம்'ரவி ஜோடியாக "வனமகன்' படத்தில் அறிமுகமானார். முதல்பட ரிசல்ட் பரவாயில்லை ரகம் என்றாலும் தெலுங்கைவிட தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சயீஷா.

Advertisment

saysha

இரண்டாவது படம் ஆர்யாவுடன் "கஜினிகாந்தி'ல் கமிட் ஆனார். அடுத்து விஜய்சேதுபதியுடன் "ஜூங்கா', கார்த்தியுடன் "கடைக்குட்டிச் சிங்கம்', கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் மோகன்லால்- சூர்யா இணையும் படத்திலும் கமிட்டாகியிருக்கும் சயீஷா, அடுத்ததாக விஜய், பிரபுதேவா, மீண்டும் கார்த்தி ஆகியோருடன் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

""சயீஷாவின் தாய்மொழி இந்தி என்றாலும் தமிழில் நான்கு படங்களே நடித்திருந்தாலும் இப்போது தமிழ் நன்றாகப் பேசுகிறார். இதுமட்டுமல்ல; பெரிய இந்தி நடிகரின் பேத்தி, செல்வாக்கான குடும்பம் என்ற பந்தாவெல்லாம் சயீஷாவிடம் கிடையாது. அதைவிட முக்கியம் சயீஷாவிடம் இருக்கும் தொழில் பக்தி. அதுக்கு சமீபத்திய உதாரணம் விஜய் சேதுபதியின் "ஜூங்கா' ஷூட்டிங் பிரான்ஸ்ல நடந்துச்சு. மைனஸ் 9 டிகிரி குளிரில் ஷூட்டிங் போய்க்கிட்டிருந்தப்ப, குளிர் படுத்திய பாட்டால், சயீஷாவின் உதடுகள் நீலநிறமா மாறியதைப் பார்த்து, டைரக்டர் கோகுல், ஹீரோ விஜய்சேதுபதி, சயீஷாவின் அம்மா என எல்லாரும் பதறிவிட்டார்கள்.

டைரக்டர் கோகுல், உடனே சயீஷாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். ஆனா சில நிமிடங்களிலேயே திரும்பிவந்த சயீஷா, "இன்னும் சில ஷாட்கள்தான் இருக்கு. அத முடிச்சுட்டு ட்ரீட்மென்ட் எடுத்துக்குறேன்'னு சொன்னதப் பார்த்து மொத்த யூனிட்டும் ஆச்சர்யமாப் பார்த்துச்சு. இதுதான் சயீஷாவின் தொழில் வெற்றி ரகசியம்'' என்றார் தயாரிப்பு நிர்வாகி ஒருவர்.

இப்படியே கன்டினியூ பண்ணுங்க சயீஷா!

-ஈ.பா. பரமேஷ்

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe