கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் படம் "தேடு.' முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதைக் களத்துடன் ரசிகர்களை ஈர்க்கத் தயாராகிவருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/search.jpg)
"இணைய தலைமுறை' திரைப்படத்தை இயக்கிய சுசி. ஈஸ்வர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, "உறுதிகொள்', "வீராபுரம்' ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார்.
மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ- மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைக்களத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்பு களுடனும், ஜனரஞ்சகமாகப் படமாக்கப்பட்டுள்ளது. மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைக்களம்.
ஒளிப்பதிவு- சபரி, படத் தொகுப்பு- வில்சி, இசை- டி ஜே கோபிநாத், பாடல்கள்- இளைய கம்பன், சண்டை பயிற்சி- எஸ்.ஆர். முருகன், நடனம்- கம்பு முருகன், வடிவமைப்பு- சசி & சசி, நிர்வாக தயாரிப்பாளர்கள்: பா. ஜெயகார்த்திக் & மனோஜ் கார்த்திகேயன், மக்கள் தொடர்பு- நிகில் முருகன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-09/search-t.jpg)