Advertisment

தப்பு பண்ணச் சொல்லும் பள்ளிகள்!'' -தயாரிப்பாளர் நிஜவெடி!

/idhalgal/cinikkuttu/schools-do-wrong-produceers-actions

"நம்ம நாட்டைப் பொருத்தவரை கல்விங்குறது வியாபாரமாகி ரொம்ப நாளாச்சு. அந்த வியாபாரத்திலும் கொடூரமான ஒரு சூட்சுமம் இருக்கு'' என்ற முன்னுரையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் "பற பற பற' படத்தின் தயாரிப்பாளர் நிகில் ஜெயின்.

Advertisment

""கிராமத்து அரசுப் பள்ளிக்கூடத்துல ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள் வணங்காமுடி, பவளக்கொடி என்ற இரு மாணவர்கள். நடுத்

"நம்ம நாட்டைப் பொருத்தவரை கல்விங்குறது வியாபாரமாகி ரொம்ப நாளாச்சு. அந்த வியாபாரத்திலும் கொடூரமான ஒரு சூட்சுமம் இருக்கு'' என்ற முன்னுரையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் "பற பற பற' படத்தின் தயாரிப்பாளர் நிகில் ஜெயின்.

Advertisment

""கிராமத்து அரசுப் பள்ளிக்கூடத்துல ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள் வணங்காமுடி, பவளக்கொடி என்ற இரு மாணவர்கள். நடுத்தர விவசாயி காளிவெங்கட்டின் மகன்களான இவர்கள் இருவருக்கும் சென்னை தனியார் பள்ளி ஒன்றில் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. படுசுட்டியாகவும் கிராமத்து இயல்போடும் இருக்கும் அந்த மாணவர்கள், தனியார் பள்ளியின் கெடுபிடியால் ரொம்பவே திண்டாடுகிறார் கள். இவர்களைச் சமாளிக்க பள்ளி நிர்வாகமும் படாதபாடு படுகிறது.

Advertisment

director

அந்தப் பள்ளிக்கு புதுசாக வரும் ஆசிரியர் "மைம் கோபி' அந்த மாணவர்களை எப்படிச் சமாளிக்கிறார்? அந்த மாணவர்களுக்கு ஏன் இலவச கல்வி தருகிறது தனியார் பள்ளி? தங்களுக்குப் பிடிக்காத அந்தப் பள்ளியிலிலிருந்து அந்த மாணவர்கள் வெளியேறி னார்களா? இல்லையா என்பதுதான் "எங்க வீர்' புரொடக்ஷன் ஸின் "பற பற பற' படத்தின் கதையம்சம்.

ஜான்விங்கிற பொண்ணு ஹீரோயினா நடிச்சிருக்காங்க. பாரதி பாலகுமாரன் டைரக்ஷன் பண்ணிருக்காரு. தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் 60 ஆசிரியர்களைச் சந்தித்து, அவர்களின் பணி அனுபவங்களைக் கேட்டு படத்தில் சேர்த்திருக்கிறோம். திருச்சி பக்கத்துல இருக்குற கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் வணங்காமுடி, பவளக்கொடியாக நடிக்கிறார் கள்.

தனியார் பள்ளி களைப் பொருத்த வரை எதற்கெடுத் தாலும் காசுதான். ஸ்கூலுக்கு லேட்டா வந்தா ஃபைன், ஹோம் ஒர்க் பண்ணலேன்னா ஃபைன், ஷூ போடலேன்னா ஃபைன், லீவு போட்டா ஃபைன், ஸ்கூலுக்கு கட் அடிச்சுக்கோ, ஆனா ஃபைன் கட்டிருன்னு வசூல் வேட்டைதான். தாராளமா தப்பு பண்ணிக்க, ஃபைன் மட்டும் தப்பாம கட்டிருங்கிறத பாலிஸியா வச்சிருந்தா மாணவர்கள் எதிர்காலம் என்னாகுறது?'' என்ற நியாயமான கேள்வி கேட்குகிறார்.

cine131118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe