குளோபல் குரூப் குழுவானது, AMN FINE ARTS என்ற தயாரிப்பு நிறுவனம்மூலம் "ஸ்கூல் கேம்பஸ்" என்ற திரைப்படத்தினைத் தயாரித்து வருகிறது.
ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் ஆர்.ஜே. ராமநாராயணா இந்தப் படத்தினை இயக்கி, தயாரிப்பது மட்டுமில்லாமல்; முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீ சந்தோஷ்குமார் மால் (மாவட்ட ஆட்சியர்) டெல்லிலி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கிவைத்தார்.
எதிர்காலத்தில் இந்தியக் கல்வியில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் மற்றும் நடனக் கலைஞரான ஆனந்த் பாபுவின் மகன் கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
"தேனிசைத் தென்றல்' தேவா இசை அமைக்கிறார். அந்தமான் நிக்கோபார், ஹேவ்லாக் தீவுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.