Advertisment

தமிழைக் காப்பாற்றுங்கள் -சினிமா விழாவில் குரல்!

/idhalgal/cinikkuttu/save-tamil-voice-film-festival

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் "ஔடதம்.' samiraஇப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் ஹீரோயின் சமீரா.

Advertisment

"ஔடதம்' விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது...

""வேற்று மொழி ஆதிக்கம் பருந்துபோல தலைக்குமேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப்போல காப்பா

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் "ஔடதம்.' samiraஇப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் ஹீரோயின் சமீரா.

Advertisment

"ஔடதம்' விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது...

""வேற்று மொழி ஆதிக்கம் பருந்துபோல தலைக்குமேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப்போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இன்று தமிழை வளர்ப்பதைவிட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது'' என்றார்.

Advertisment

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது...

kk""தமிழில்தான் எப்போதும் நான் கையெழுத்துப் போடுவேன். காசோலைகளிலும்கூடத் தமிழில் தான் கையெழுத்துப் போடுவேன். ஆனால் தமிழில் கையெழுத்துப் போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல் இருக்கிறார்கள். தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது.

அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போகவேண்டியி ருந்தது. அப்படிப் போனபோது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது.

சில நாடுகளில் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கை கள் வந்தால்தான் முடியும்.

இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்'' என்றார்.

_______________

"எங் மங் சங்'

prabudeva

வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ். சீனிவாசன், கே.எஸ். சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்.'

இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி யாக லட்சுமிமேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே. பாலாஜி, சித்ராலட்சுமனன், "கும்கி' அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் "பாகுபலி' வில்லன் பிரபாகர் இந்தப் படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

ஒளிப்பதிவு- ஆர்.பி. குருதேவ், எடிட்டிங்- பாசில், நிரஞ்சன், பாடல்கள்- பிரபுதேவா, மு. ரவிகுமார், இசை- அம்ரீஷ், நடனம்- ஸ்ரீதர், நோபல், ஸ்டண்ட்- சில்வா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - அர்ஜுன் .எம்.எஸ்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது.

சமீபத்தில் இந்தப் படத்திற்காக பிரபுதேவா "பாகுபலி' வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டைக் காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.

cine161018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe