Advertisment

சசிகுமார் பிஸி! சங்கடத்தில் நந்தகோபால்!

/idhalgal/cinikkuttu/sasikumar-busy-nandagopal-embarrassment

"கத்துக்குட்டி' சரவணன் டைரக்ஷனில், சசிகுமார், சமுத்திரகனி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுபோக, சூர்யா வின் 2-டி என்டர் டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் பெயரிடப் படாத படத்திலும் சசிகுமாரும்

"கத்துக்குட்டி' சரவணன் டைரக்ஷனில், சசிகுமார், சமுத்திரகனி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுபோக, சூர்யா வின் 2-டி என்டர் டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் பெயரிடப் படாத படத்திலும் சசிகுமாரும் சமுத்திரக் கனியும் நடிக்கிறார் கள். இதுவும் போக, "ராஜவம்சம்' படத்தில் நிக்கி கல்ராணியும் சசிகுமார்- சத்யராஜ், மிருணாளினி நடிக்கும் "எம்.ஜி.ஆர். மகன்' படத்தின் ஷூட்டிங்கும் பாதிக்கும்மேல் முடிந்து விட்டது.

Advertisment

sasikumar

இதுல சோகமான சங்கதி என்னன்னா... "சுந்தரபாண்டியன் ' டைரக்ட் பண்ணி முடித்துள்ள சசிகுமார்- மடோனா செபஸ்டின் காம்பினேஷனில் "கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரொம்ப நாட்களாகியும் ரிலீசாக முடியாமல் இருக்கிறது. அதைவிட பெரிய சோகம் என்னன்னா... சமுத்திரகனி டைரக்ஷனில் சசிகுமார்- அஞ்சலி நடித்த "நாடோடிகள்-2' படம் எடுத்துமுடித்தே ஒரு வருஷத்துக்கும் மேலாயிருச்சு. ஆடியோ ரிலீஸ் ஆகி ஆறு மாசத்துக்கு மேலாச்சு.

ss

Advertisment

இந்த விஷயத்தை 2018 மார்ச் மாதமே நமது "சினிக்கூத்து' இதழில் எழுதி னோம். இதழ் வெளியான அன்றே நம்மைத் தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் நந்தகோபால், ""படம் நல்ல விலைக்குப் போயிருக் கண்ணே. இந்த நேரத்துல போய் இப்படி எழுதிட்டீங்களே! ரொம்ப வருத்தமா இருக்கு. கண்டிப்பா ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்'' என்றார் உறுதியுடன். ""ரிலீஸ் ஆகி நீங்க லாபம் பார்த்தா ரொம்ப சந்தோஷம்'' என்றோம்.

இதோ 2019 முடிந்து 2020-ஆம் பிறந்துவிட்டது. "நாடோடிகள்-2' ரிலீஸ் எப்பன்னு நந்தகோபால்தான் சொல்லணும்!

-பரமு

cini070120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe