மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் "நாடோடிகள்-2' உருவாகிவருகிறது. இதில் சசிகுமார்- அஞ்சலி மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார் கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வருகிற 9-ஆம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது.
பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள்.