7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார்- வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத் தோடு இணைந்து தயாரிக்கும் படம் "சர்பத்.'

Advertisment

sar

அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் நாயகனாக "பரியேறும் பெருமாள்' புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு முதன்முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதா பாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.

""நம் போக்கில் கதையை வளைக் காமல் கதைபோகும் வழியில் திரைக் கதையை அமைத்து, பக்கா பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறேன்'' என்கிறார் இயக்குநர் பிரபாகரன். கேமராமேனாக இயக்குநரின் பெயரைக்கொண்ட பிரபாகரன் இணைந்திருக்கிறார். எடிட்டிங் பிரசன்னா ஜி.கே., இசையமைப்பாளராக "சூப்பர் சிங்கர்' டைட்டில் வின்னர் அஜிஸ் "தரமணி', "பேரன்பு' உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

""படத்தில் நடக்கும் சூழலும், படத்திலுள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்து கொண்டாட வைக்கும்'' என்கிறார் இயக்குநர்.