Advertisment

விமர்சனம் - சர்கார்

/idhalgal/cinikkuttu/sarkar-review

மிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக அமெரிக்கா விலிருந்து வருகிறார் விஜய். திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த பின்தான், அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டாகப் போட்டு விட்டார்கள் என்று தெரிகிறது. இதனால் டென்ஷனாகி, வாக்கு எண்ணிக்கையின் முடி

மிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக அமெரிக்கா விலிருந்து வருகிறார் விஜய். திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த பின்தான், அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டாகப் போட்டு விட்டார்கள் என்று தெரிகிறது. இதனால் டென்ஷனாகி, வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிக்க கோர்ட்மூலம் தடை வாங்கும் விஜய், பழ. கருப்பையா முதல்வராகப் பதவி ஏற்பதற்கும் தடை வாங்கிவிடுகிறார். இதனால் முதலமைச்சர் பழ. கருப்பையா, அமைச்சர் ராதாரவி ஆகியோர் விஜய்மீது ஆத்திரமாகி, அவரைத் தீர்த்துக்கட்ட களம் இறங்குகிறார்கள்.

Advertisment

sarkar

கனடாவிலிருந்து தனது அப்பாவான முதலமைச்சரை ஆபரேட் பண்ணும் வரலட்சுமி, தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்பாவையே காவு கொடுத்துவிட்டு, கட்சியைக் கைப்பற்றி முதல்வர் வேட்பாளராகவும் நிற்கிறார்.

Advertisment

பழ. கருப்பையாவும் ராதாரவியும் பக்கா வில்லன்களாகக் கலக்கி எடுத்திருக்கிறார்கள். அதிலும் ராதாரவியின் மேனரிசம் செம தூள். இவர்களுக்கு அடுத்து வில்லியாக கொடி கட்டிப் பறக்கிறார் வரலட்சுமி. உடம்பை சிக்கென மெயின்டெய்ன் பண்ணும் விஜய், நடனத்திலும் சண்டைக் காட்சியிலும் சூப்பர் பெர்ஃபாமென்ஸ் பண்ணியிருக்கிறார். டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுக்கு பக்கா சப்போர்ட் பண்ணியிருக்கிறார் கேமராமேன் க்ரிஷ் கங்காதரன். ஒரு விரல் புரட்சியே பாட்டிலும் பின்னணி இசையிலும் ஏ.ஆர். ரஹ்மான் ஜொலிக்கிறார்.

மீடியாக்களை கேவலப்படுத்துவது, ஓட்டுப்போட ஓடுங்கடா என வாக்காளர் களைச் சொல்வதைப் பார்த்தால், நான்தான், நான் மட்டும்தான் என விஜய்யின் மண்டைக்குள் ஏறிவிட்டது தெரிகிறது.

cine201118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe