ம். சினிமாஸ் கே.வி. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் "காவியன்.'

hollywood

இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில் தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அமெரிக்காவின் சூதாட்ட நகரம்தான் லாஸ்வேகாஸ்.

இரவு நேரங்கள்கூட பகல் நேரம்போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதிவாங்கி "காவியன்' படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஹாலிலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள்.

"காவியன்' படப்பிடிப்பு நடந்த அதே லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் "சர்கார்' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது.

s