சரவணனின் அதிரடி- சரவெடி!

/idhalgal/cinikkuttu/saravanans-action-saravedi

"சரவணா ஸ்டோர்ஸ்' இந்தப் பெயர் சென்னைவாசி களுக்கு மட்டுமல்ல; தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர். ""மெட்ராஸ் வரைக்கும் வந்துட்டோம், "சரவணா ஸ்டோர்ஸு'-க்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோம்'' என தென்மாவட்ட மக்கள் நினைக்கும் அளவுக்கு புகழ்பெற்ற வர்த்தக நிறுவனம்.

ss

"சரவணா ஸ்டோர்ஸி'-ன் ஆரம்பகால விளம்பரப் படங்களில் கலக்கி எடுத்திருப்பார் புன்னகை இளவரசி சினேகா. "சரவணா ஸ்டோர்ஸி'-ன் உரிமையாளர்களுள் ஒருவரான யோகரத்தினம் மகன் சரவணன் அருள், அந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஆனார். புதுமையாக ஏதாவத

"சரவணா ஸ்டோர்ஸ்' இந்தப் பெயர் சென்னைவாசி களுக்கு மட்டுமல்ல; தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர். ""மெட்ராஸ் வரைக்கும் வந்துட்டோம், "சரவணா ஸ்டோர்ஸு'-க்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோம்'' என தென்மாவட்ட மக்கள் நினைக்கும் அளவுக்கு புகழ்பெற்ற வர்த்தக நிறுவனம்.

ss

"சரவணா ஸ்டோர்ஸி'-ன் ஆரம்பகால விளம்பரப் படங்களில் கலக்கி எடுத்திருப்பார் புன்னகை இளவரசி சினேகா. "சரவணா ஸ்டோர்ஸி'-ன் உரிமையாளர்களுள் ஒருவரான யோகரத்தினம் மகன் சரவணன் அருள், அந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஆனார். புதுமையாக ஏதாவது செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வது வர்த்தக நிறுவனங் களின் முக்கிய வேலை.

ssss

ஆனால், சரவணன் அருளோ தீபாவளி, பொங்கலுக்காகத் தயாராகும் விளம்பரப் படங்களில் தானே நடிப்பது என அதிரடியாகக் களம் இறங்கினார். கலர் கலரான காஸ்ட்யூம்கள், ரஜினி ஸ்டைல் நடை என விளம்பரப் படங்களில் பொளந்து கட்டி னார். அடுத்ததாக அருள் பண்ணியதுதான் சரியான அதிரடி. தமன்னா, ஹன்சிகா போன்ற பிரபல ஹீரோயின்களுடன் ஜோடிபோட்டு விளம்பரப் படங்களில் ஸ்டைல் காட்டி பின்னி எடுத்தார் அருள்.

தமன்னா, ஹன்சிகா ஆகியோர் பத்தாது என்று, ஹாலிவுட் மாடலிங் நடிகைகளையும் விளம்பரப் படத்தில் நடிக்கவைத்தும் பிரம்மிக்க வைத்தார் சரவணன் அருள். ராதா மோகன் டைரக்ஷ னில் அருள்நிதி நடித்த "பிருந்தாவனம்' படத்தில், "அண்ணாச்சி மகன் எப்ப ஹீரோவாகப் போறாருன்னு தெரியுமா?' என விவேக் காமெடி டயலாக் பேசும் அளவுக்கு சரவணனின் விளம்பரப் படங்கள் பேசின.

இரண்டு வருடங்களுக்கு முன்பே பல இணை இயக்குநர் களிடம் கதை கேட்டு நடிக்கவும் தயாரானார் சரவணன். விளம் பரப் பட ஹீரோயின்களான தமன்னா, ஹன்சிகா ஆகியோரிடம் தன்னுடன் சினிமா ஹீரோயினாக நடிக்க, பெரும் தொகை தருவதாகப் பேசினார் சரவணன். ஆனால், அவர்கள் என்ன நினைத் தார்களோ, சரவணனின் சினிமாத் திட்டம் தடைப்பட்டது.

அதனால்தானோ என்னவோ இப்போது சரவணன் அதிரிபுதிரியாக கலக்கும் தீபாவளி விளம்பரப் படங்களில் எந்த ஹீரோயினையும் நடிக்கவைக்கவில்லை. 2020-ல் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ஹீரோவாகியே தீருவது என்ற லட்சியத்துடன் களம் இறங்கிவிட்டார் சரவணன். "சரவணா ஸ்டோர்ஸ்-தி லெஜண்ட்' விளம்பரப் படங்களின் டைரக்டர் களான ஜே.டி.-ஜெர்ரி இரட்டை யர்கள்தான் இப்படத்தை டைரக்ட் பண்ணப்போகிறார் கள். படத்திற்கு 75 கோடி பட்ஜெட் போட்டுள்ள சரவணன், சில மாதங்களுக்குமுன்பு ஏ.ஆர். ரகுமானை சந்தித்துப் பேசியுள்ளா ராம். ரகுமான் இல்லை யென்றால் அனிருத் இசையமைக்கலாம்.

இப்போது மார்க் கெட் டல்லாக இருக்கும் ஹன்சிகாவிடம் மீண்டும் பேசும் முடிவில் இருக் கார் சரவணன். அவர் மறுத்தால் மீண்டும் தமன்னா... அவரும் மறுத் தால், ஐஸ்வர்யா ராஜேஷ், தான்யா ரவிச்சந்திரன், தாரா அலிஷா பெர்ரி (ஏ-1 படத்தில் சந்தானத் திற்கு ஜோடிபோட்டவர்) அதுல்யா ரவி, இந்துஜா என ஹீரோயின்கள் லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு பலவாறாக யோசிக்கிறாராம் சரவணன் அருள்.

-ஈ.பா. பரமேஷ்வரன்

cini291019
இதையும் படியுங்கள்
Subscribe