Advertisment

சந்தானமா... ஆ...'' அலறும் சினிமாப் புள்ளிகள்!

/idhalgal/cinikkuttu/santhanamava-oh-waking-cinematic-points

கொடுக்கல்- வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் பார்ட்டியை வெளுத்துக் கட்டினார் சந்தானம். இதில் சந்தானத்திற்கு ஆதரவாக வன்னியர்கள் சிலர் களத்தில் குதித்தனர். சந்தானத்திற்கு அந்த ப

கொடுக்கல்- வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் பார்ட்டியை வெளுத்துக் கட்டினார் சந்தானம். இதில் சந்தானத்திற்கு ஆதரவாக வன்னியர்கள் சிலர் களத்தில் குதித்தனர். சந்தானத்திற்கு அந்த பேக்- ரவுன்ட் தேவைப் பட்டது. அன்புமணி ராமதாசையும் சந்தித்தார் சந்தானம். இப்போது அந்த பேக்- ரவுன்டை நினைத்து, சந்தானத்தைப் பார்த்தாலே விலகி ஓடுகிறார்களாம் சினிமாப் புள்ளிகள்.

Advertisment

santhanam

இதுவும் சந்தானம் மேட்டர்தான். "நான் கடவுள்', "பாஸ் (எ) பாஸ்கரன்', "நிமிர்ந்து நில்' என ஹிட் படங்கள் கொடுத்த வாசன் வென்சர்ஸ் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ். சிவராமன் சந்தானத்தை ஹீரோவாகப் போட்டு, "சக்கப்போடு போடு ராஜா' எடுத்தனர்... எடுத்தனர்... எடுத்தனர்.. எடுத்துக்கொண்டே இருந்தனர். என்னாச்சு என விசாரித்தால், படத்தை டிராப் பண்ணிவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார் கள். ஜூலை 6-ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட "சர்வர் சுந்தரம்' கதி என்னாச்சுன்னே தெரியல என ஓப்பனாகவே கமென்ட் அடிக்கிறார்கள்.

-பரமேஷ்

இதையும் படியுங்கள்
Subscribe