Advertisment

நொந்து புலம்பிய சந்தானம்!

/idhalgal/cinikkuttu/santhanam-0

"சர்வர் சுந்தரம்', "சக்கப்போடு போடு ராஜா' படங்கள் கிடப்பில் கிடக்கும் நிலையில் சந்தானம் நடித்துள்ள "ஏ-1' படம் கடந்த 26-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. 23-ஆம் தேதி இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. அப்போது கதாநாயகி தாரா

"சர்வர் சுந்தரம்', "சக்கப்போடு போடு ராஜா' படங்கள் கிடப்பில் கிடக்கும் நிலையில் சந்தானம் நடித்துள்ள "ஏ-1' படம் கடந்த 26-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. 23-ஆம் தேதி இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. அப்போது கதாநாயகி தாரா அலிசா பெரி பேசும்போது, ""சந்தானம் சார், இயக்குநர் ஜான்சன் சார் மற்றும் தயாரிப்பாளர் மூவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக சந்தோஷமான அனுபவம்'' என்றார்.

Advertisment

ss

ஹீரோ சந்தானம் பேசும்போது, ""2000-ல டி.வில அறிமுகமானேன். இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம்தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. வியாசர் பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். ஒரு பிராமின் பொண்ணுக்கும் லோக்கல் பையனுக்கும் இடையே நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம்.

நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கி றார். என்னுடைய வேண்டுகோள் என்னன்னா...

படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா... ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப்போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்ட ரில் சென்று பாருங்கள்"" என நொந்து புலம்பினார் சந்தானம்.

Advertisment
cine060819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe