ந்தானத்திற்கு ஹீரோயினாக தமிழில் "சக்கப் போடுபோடு ராஜா'-வில் அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதன்பின் தமிழில் "இருட்டு அறையில் முரட்டுக் குத்து'-க்குப்பின் பெரிதாக வாய்ப்பு எதுவும் அமையவில்லை. மீண்டும் சந்தானத் துடன் நடித்த "சர்வர் சுந்தரம்' படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் ரிலீசாகுற மாதிரி தெரியல என்பதால் தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். மராத்தி மொழி படம் ஒன்றில் வித்யாபாலனுடன் நடித்தார். இப்போது சந்தானம் நடித்து ரிலீசாகியிருக்கும் "தில்லுக்கு துட்டு-2' ஹிட் அடித்திருப்பதால், "சர்வர் சுந்தரம்' ரிலீசாகிவிடும், அதன்பின் சந்தானம் பிஸியாகிவிடுவார்.

Advertisment

santhanam

அதற்குள் அவருடன் ஜோடிபோட இப்போதே கமிட் ஆகிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் சந்தானத்திற்கு நூல்விட ஆரம்பித்துள்ளாராம் வைபவி சாண்டில்யா.

Advertisment

santhanam

சந்தானமும் ஓ.கே.சொல்லிலிவிட்டதாக நமது கோலிலிவுட் சோர்ஸ் சொல்கிறது. இதுபோக மேகா ஆகாஷ், ஸ்ரீபிரியங்கா, "மேயாத மான்' இந்துஜா, நிவேதா பெத்துராஜ், யாஷிகா ஆனந்த், ப்ரியா ஆனந்த் என ஒரு பட்டாளமே சந்தானத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் போறாகளாம். ஒரு பட ஹிட் என்ன வேலையெல்லாம் செய்து பாருங்க மக்களே.

-பரமேஷ்