லைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் உருவாகும் "இறலி' .படத்தை இயக்குபவர் ஜெய். விஜயகுமார். இவர் இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாரிடம் சினிமா கற்றவர்.

படத்தின் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா, நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார்கள். இவர் "குயின்' படத்திலும், மலையாளத்தில் மோகன் லாலின் "லூசிஃபர்' என்ற படத்திலும் மஞ்சுவாரியர் மகளாக நடித்தவர்.

ss

படத்தைப் பற்றி இயக்கு நர் ஜெய். விஜயகுமார் கூறும் போது, ""இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் . மீறினால்- செயற்கை வழிக்கு இழுத்தால், அதன்விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக் கும் படமாக "இறலி' இருக் கும். "இறலி' என்ற சொல் திருக் குறளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. விளைவு என்பதே அதன் பொருள்.

Advertisment

ஒரு பொருளின்மீது ஆசைப்பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதைச் சொல்வதுதான் இப்படத்தின் கதை'' என்கிறார்.

கதாநாயகனும் தயாரிப்பாளரு மான வெண்ணிஸ் கண்ணா பேசும் போது, ""இப்படத்தின் கதையைக் கேட்ட நான் இதைத் தயாரிப்பதற்கும், நாயகனாக நடிப்பதற்கும் ஒப்புக் கொண்டேன்.

ரசாயன உரங்களைப் போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. அதனால், விவசாயத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி கட்டமுடியாமல் போனதால் என் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். ஒரு விவசாயி யின் தற்கொலைக்குப் பிறகு அந்த குடும்பம் என்னாகும் என்று சொல் கிற படமாகவும் இது இருக்கும்'' என்றார்.

Advertisment

படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீஷ், இசை- எம்.ஓ.பி. ராஜா, எடிட்டர் ஹாசிம் விரும்பும் திறமைக்கரங்கள் இணைந்துள்ளன.)