மறைந்த இயக்குநர் மணிவாசகத்தின் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம், பல வருட இடைவெளிக்குப்பின் தயாரித்துள்ள படம்தான் "களவாணி மாப்பிள்ளை.' மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் தான் படத
மறைந்த இயக்குநர் மணிவாசகத்தின் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம், பல வருட இடைவெளிக்குப்பின் தயாரித்துள்ள படம்தான் "களவாணி மாப்பிள்ளை.' மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் தான் படத்தின் டைரக்டர். ஹீரோவாக தினேஷ், ஹீரோயினாக அதிதி மேனன். தினேஷின் அம்மாவாக ரேணுகா, மாமியாராக தேவயானி, மாமனாராக ஆனந்தராஜ் மற்றும் முனீஸ்காந்த், சாம், மனோபாலா ஆகியோரெல்லாம் நடித்திருக்கிறார்கள்.
யார் பொய் சொன்னாலும் தேவயானிக்குப் பிடிக்காது.
அவரிடம் கார் ஓட்டத் தெரியும் என பொய் சொல்லியதால், கணவர் ஆனந்தராஜை விலக்கி வைக்கிறார். அதே பொய்யை தேவயானியின் மகளான ஹீரோயின் அதிதி மேனனைக் காதலித்து கல்யாணம் பண்ணப்போகும் தினேஷும் சொல்கிறார். பொய் அம்பலமானதா? கல்யாணம் நடந்ததா என்பதுதான் "களவாணி மாப்பிள்ளை.' சீன்கள் எல்லாமே செயற்கைத்தனத்தால் திணறுகிறது.
படம் சுமாராக இருந்தாலும் ஹீரோயின் அதிதி மேனன் சூப்பராக இருக்கிறார். நல்ல கதை, நல்ல டைரக்டர் களுக்கு வலைவீசினால் தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம்.