Advertisment

என்னை உடல் ரீதியாகத் துன்புறுத்தினார் சனம் ஷெட்டி! -தர்ஷனின் தாறுமாறு பேட்டி!

/idhalgal/cinikkuttu/sanam-shetty-interview-darshans

"2018 முதல் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால், இருவரின் பணியில் இடையூறு வரும் என்பதால், வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று முடிவுஎடுத்தோம். இதற்கிடையே பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் நடித்த படமும் பாதியில் நின்றுவிட்டது. எனக்கும் விசா முடிவடைந்ததால் ஸ்ரீலங்காவிற்கு திரும்பிவிட்டேன். சுமார் எட்டு மாதங்களுக்குப்பிறகு படப்பிடிப்பிற்காக வேலைவாய்ப்பு விசாவில் வந்தேன். இங்குவந்த பிறகும் மூன்று மாதங்கள் காத்திருக்கவேண்டும் என்று கூறினார் கள். அதுவரை எனது செலவுக்கு எனது அண்ணன்தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். அவ்வப்போது எனக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்

"2018 முதல் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால், இருவரின் பணியில் இடையூறு வரும் என்பதால், வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று முடிவுஎடுத்தோம். இதற்கிடையே பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் நடித்த படமும் பாதியில் நின்றுவிட்டது. எனக்கும் விசா முடிவடைந்ததால் ஸ்ரீலங்காவிற்கு திரும்பிவிட்டேன். சுமார் எட்டு மாதங்களுக்குப்பிறகு படப்பிடிப்பிற்காக வேலைவாய்ப்பு விசாவில் வந்தேன். இங்குவந்த பிறகும் மூன்று மாதங்கள் காத்திருக்கவேண்டும் என்று கூறினார் கள். அதுவரை எனது செலவுக்கு எனது அண்ணன்தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். அவ்வப்போது எனக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்பைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டினேன். ஷனம் ஷெட்டி அவ்வப்போது எனது பெயரை முன்னெடுத்து எனக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுப்பார். அவர் மிகப்பெரிய உதவிகளை வழங்கி இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும்.

Advertisment

dd

எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என் பெற்றோருக்குத் தெரியாது. ஏனென்றால், "எனக்கு ஒரு தங்கை இருப்பதால், அவர் திருமணம் முடியும்வரை எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியாமல் இருக்க வேண்டும். அதற்கு சம்மதித்தால் நான் செய்துகொள்கிறேன்' என்று ஷனம் ஷெட்டியின் பெற்றோரிடம் கூறினேன்.

அவர்கள் சம்மதித்தபின்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிறகு, நான் "பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குச் செல்லும்போது ஷனம் ஷெட்டி, ""நீ யாரிடமும் இந்த விஷயத்தைக் கூறவேண்டாம். ஏனென்றால், வையில்ட் கார்ட் சுற்றில் நான் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அவருடைய மாமா அரசியலில் பெரும்புள்ளி, அவரை வைத்து "பிக்பாஸ்' நிகழ்ச்சி யில் பங்கேற்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆகையால் தான் ஆரம்பத்தில் நான் எதுவும் கூறவில்லை. மீரா பிரச்சினை ஆரம்பிக்கும்போதுதான் எங்கள் காதலைப் பற்றிக் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கூறினேன்.

Advertisment

என்னிடமும் "இனிமேல்' பிக்பாஸி-ல் கலந்துகொண்ட பெண்களிடம் நீ பேசுவது, இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வது கூடாது. மேலும் நீ எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச்செல்ல வேண்டும், என்று வற்புறுத்தினார்.

அதேபோல், நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தன்னை கதாநாயகியாக போடவேண்டும் என்றும் கூறி வந்தார். அதற்கு நான் "எனக்கு இந்த கதாநாயகி தான் வேண்டும் என்று கூறும் அளவுக்கு வளரவில்லை' என்று கூறினேன். இதுபோல், அவ்வப்போது எங்களுக்குள் சிறுசிறு விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தன.

அவர் விசா சம்பந்தமாக சுமார் ரூ.3 லட்சம் எனக்கு அளித்து இருந்தார். அதை 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அவரி டம் திருப்பிக் கொடுத்து விட்டேன். நிச்சயதார்த்த செலவு ரூ.2 1/2 லட்சம்தவிர, வேறு எந்த பண உதவியும் அவரிடமிருந்து நான் பெறவில்லை.

darsan

என்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். "பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என்னுடன் பழகிய சில பெண்களிடம் அவர் நேரடியாக சென்று மிரட்டி இருக்கிறார்.

அவர்களுக்கு பிரச்சினை வரும் என்ற காரணத்தால், அவர்கள் பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை.

அவர்களின் இன்ஸ்டாகிராம் அடையாளத்தைத் தடை செய்ததும் அவர்தான்.

நான் "பிக்பாஸ்' நிகழ்ச்சி யில் இருந்த சமயத்தில் ரம்யா- சத்யா திருமணத் திற்கு அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன'' என போட்டுத் தாக்கினார் தர்ஷன்.

cini180220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe