ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படமான "பாண்டிமுனி' படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25
நாட்கள் நடைபெற்றது. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.
படம் பற்றியும் படப்பிடிப்பில் நடந்த அதிசய சம்பவம் பற்றியும் கஸ்தூரி ராஜா பேசும்போது...
""பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. கோத்தகிரியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது. பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் இஷ்டக் கடவுளாகக் கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டி சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள்.
அந்த கோவிலுக்கு பஞ்சபாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோவில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம்.
அங்குவந்த ஊர்மக்கள் இந்த கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது. செருப்பு உபயோகிக்கக்கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தச் சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிலிக்கு சாமி வந்து ஆடஆரம்பித்து விட்டார். நாங்கள் வெலவெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்றுகூடி பரிகார பூஜை செய்தபிறகே சாமியாட்டம் நின்றது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-08/newfaceactress-t.jpg)