சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி. சிவராம் குமார் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் "சண்டிமுனி.' நட்ராஜ்- மனிஷா யாதவ் நடிக்கிறார்கள். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manisha_2.jpg)
ஒளிப்பதிவு- செந்தில் ராஜகோபால், இசை- ஏ.கே. ரிஷால் சாய், பாடல்கள்- வ. கருப்பன், கலை- சி. முத்துவேல், ஸ்டண்ட்- சூப்பர் சுப்ப ராயன், எடிட்டிங்- புவன், தயாரிப்பு நிர்வாகம்- முருகன் குமார், தயாரிப்பு மேற்பார்வை- என்.ஆர். குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா செல்வகுமார்.
இந்தப் படத்திற்காக சென்னை வளசர வாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங் கும், முப்பது அடி உயர சிலையும் அமைக்கப் பட்டு அதன்முன் மனீஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட "பெரும் கோபக்காரா எங்க சண்டி வீரா தொல்லை தீர்க்க வாடா ஆவி ஓட்ட வாடா' என்று பாட்டுப் பாடி ஆடிய இந்தப் பாடல் காட்சியில் 40 நடனக் கலைஞர்கள், 300 துணை நடிகர்- நடிகைகள் பங்கேற்க, .அசோக் ராஜா நடன அமைப் பில் பிரம்மாண்ட மாகப் படமாக்கப் பட்டது. தீமிதிக் காட்சிகளும், ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப் பட்டன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/manisha-t.jpg)