விக்ரம் நடிச்ச "ஸ்கெட்ச்' ஓஹோன்னு ஓடிச்சி. அதனால படம் ரிலீசான இரண்டாவது நாளே சக்சஸ் பார்ட்டியெல்லாம் வைத்த கூத்தெல்லாம் நடந்துச்சு. இந்தக் கூத்தை நடத்துனவரு, படத்தை அண்டர்டேக் பண்ணிய கலைப்புலிலி தாணு. இதப் பார்த்து சினிமாப் புள்ளிகளே கெக்கெ பிக்கேன்னு சிரிச்சாங்க. "அது எப்படிங்க, முழுசா எட்டு ஷோகூட ஓடல.
அதுக்குள்ள சக்சஸ் பார்ட்டியா?'ன்னு தியேட்டர்காரர்களும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ஆனா படம் என்னவோ பத்தோட பதினொன்ணு இத்தோட இது ஒண்ணு கதைதான்.
சரி, இப்ப கரண்ட் மேட்டருக்கு வருவோம். கேரளாவைச் சேர்ந்த
விக்ரம் நடிச்ச "ஸ்கெட்ச்' ஓஹோன்னு ஓடிச்சி. அதனால படம் ரிலீசான இரண்டாவது நாளே சக்சஸ் பார்ட்டியெல்லாம் வைத்த கூத்தெல்லாம் நடந்துச்சு. இந்தக் கூத்தை நடத்துனவரு, படத்தை அண்டர்டேக் பண்ணிய கலைப்புலிலி தாணு. இதப் பார்த்து சினிமாப் புள்ளிகளே கெக்கெ பிக்கேன்னு சிரிச்சாங்க. "அது எப்படிங்க, முழுசா எட்டு ஷோகூட ஓடல.
அதுக்குள்ள சக்சஸ் பார்ட்டியா?'ன்னு தியேட்டர்காரர்களும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ஆனா படம் என்னவோ பத்தோட பதினொன்ணு இத்தோட இது ஒண்ணு கதைதான்.
சரி, இப்ப கரண்ட் மேட்டருக்கு வருவோம். கேரளாவைச் சேர்ந்த ஷிபு தமீன்ஸ் என்ற தயாரிப்பாளர் விஜய்- சிம்புதேவன் காம்பினேஷனில் "புலி' படம் எடுத்தவர். புலிலி பாஞ்சுச்சா, படுத்துச்சாங்குறதெல்லாம் இப்பவரைக்கும் யாருக்கும் தெரியாது. சரி கரண்ட் மேட்டருக்கு வருவோம். அந்த ஷிபு தமீன்ஸ்தான் இப்ப ரிலீசாகியிருக்கும் "சாமி-2'-வின் தயாரிப்பாளர். ஹரி டைரக்ஷனில் நடித்த முதல் "சாமி' செம ஓட்டம் ஓடுச்சு. இந்த ரெண்டாவது சாமியும் பேய்த்தனமாக ஓடும் என்ற நம்பிக்கை விக்ரமிற்கு. பெரிய ஹீரோ நடிச்ச படம் ஓடுனா நமக்கு சந்தோஷம்தான். ஆனா நாம சந்தோஷப்படுற மாதிரியா இப்ப சினிமாவின் நிலைமை இருக்கு.
விக்ரம்- கீர்த்தி சுரேஷ்- ஹரி காம்பினேஷன் என்பதால் "சாமி-2'-வின் வியாபாரமெல்லாம் நல்லபடியா முடிஞ்ச நிலையிலதான், ஆரா சினிமாஸ் மகேஷ் அக்கப் போரை ஆரம்பிச்சாரு. தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்சுக்கும் மகேஷுக்கும் லடாய் ஆகி வடபழனி போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து போனது. அதனால் "சாமி-2' விரைவில் வெளியீடுன்னுதான் விளம்பரம் வந்துகொண்டிருந்தது. என்ன நடந்துச்சோ, ஏது நடந்துச்சோ செப்டம்பர் 21-ஆம் தேதி ரிலீசுன்னு 15-ஆம் தேதியிலிலிருந்து விளம்பரம் வர ஆரம்பிச்சது.
21-ஆம் தேதி ரிலீஸ் ப்ளான் வைத்திருந்த மினிமம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இதனால் செம டென்ஷனாகிவிட்டார்கள். சாமியின் திடீர் அறிவிப்பால் தியேட்டர்காரர்களும் திணறித்தான் போனார்கள். விக்ரம் படத்திற்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்த காலம் போய், இப்போது விக்ரம் தரப்பே தியேட்டர்காரர்களிடம் கெஞ்சும் நிலைமை ஆகிவிட்டது. இதாவது கிடைச்சுதே என்கிற லெவலுக்குப் போய்விட்டது விக்ரம்- ஹரி நிலைமை. தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் நிலமை எப்படி இருக்கோ?
"சாமி-2'-வின் கதை அப்படி என்றால் விஷால்-லி லிங்குசாமி கூட்டணியின் "சண்டக்கோழி-2'-வின் கதை வேறு மாதிரியா இருக்கு.
அக்டோபர் 18-ஆம் தேதி ஆயுத பூஜையன்று "சண்டக்கோழி-2' ரிலீஸ் என அறிவித்திருக்கிறார் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷால். சமீபத்தில் ரிலீசான விஷாலின் "இரும்புத்திரை' கலெக்ஷன் ரீதியாக செம ஓ.கே. என்றாலும், சிலபல தியேட்டர் அதிபர்களை அநேக இடங்களில் ஏடாகூடமாகப் பேசியிருந்தார் விஷால்.
அதை மனதில் வைத்து சண்டக்கோழியுடன் மல்லுக் கட்டலாமா என மும்முரமாக ஆலோசித்து வருகின்றனர் அந்த சிலபல தியேட்டர் அதிபர்கள்.
"சாமி-2'-விற்கும் "சண்டக் கோழி-2'-விற்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னா, இரண்டு படத்திலும் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்தான்.
-ஈ.பா. பரமேஷ்வரன்