Advertisment

சமுத்திரகனியும் சங்கடங்களும்!

/idhalgal/cinikkuttu/samutharakani

"96' படம் நல்லா கல்லா கட்டி யும், தெலுங்கு ரைட்ஸ் விஷயத்தில், படத்தின் டைரக்டர் பிரேம் குமாருக்கும், படத்தைத் தயாரித்த நந்தகோபாலுக் கும் இடையே மனக் கசப்பாகி கசமுசவாகியது. அந்த மனக்கசப்பு மறைவதற்குள்ளேயே, அடுத்த கசப்பைக் க

"96' படம் நல்லா கல்லா கட்டி யும், தெலுங்கு ரைட்ஸ் விஷயத்தில், படத்தின் டைரக்டர் பிரேம் குமாருக்கும், படத்தைத் தயாரித்த நந்தகோபாலுக் கும் இடையே மனக் கசப்பாகி கசமுசவாகியது. அந்த மனக்கசப்பு மறைவதற்குள்ளேயே, அடுத்த கசப்பைக் கொடுத்துள்ளார் "நாடோடிகள்-2' டைரக்டர் சமுத்திரகனி. ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் "நாடோடிகள்-2'-ஐ எடுத்துக்கொடுக்க ஒத்துக் கொண்டு படத்தை எடுத்து முடித்துவிட்டார் சமுத்திரகனி. படம் முடிந்து பல மாதங்கள் ஆனது. இதோ விரைவில்... வெகு விரைவில்... என்று ஆடியோ ரிலீஸ் குறித்து விளம்பரமும் செய்தார் நந்தகோபால். ஆனால், சமுத்திரகனியோ, ""ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில நீங்க கொடுத்த பணத்தைவிட 85 லட்ச ரூபாய் ஜாஸ்தி யாகிருச்சு.

Advertisment

s

அதனால அந்த 85 லட்சத்தைக் கொடுத்துட்டு, படத்தை ரிலீஸ் பண்ணிக்குங்க'' என்று சொன்னதும் நொந்து விட்டார் நந்தகோபால். தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் வெகுசீக்கிரம் பஞ்சாயத்து கூடலாம் என்கிறார்கள் கோலிவுட்டில். இப்போதெல்லாம் தன்னிடம் கதைசொல்ல வருபவர்களிடம் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டு அலற விடுகிறாராம் சமுத்திரகனி. இரண்டு மாதங் களுக்கு முன்னால "பெட்டிக் கடை'-ன்னு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படத்தில் நாலு சீன்தான் வருவாரு கனி. அதுக்கு சம்பளம் 40 லட்ச ரூபாயாம்!

Advertisment
cine230419
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe