Advertisment

சமந்தாவின் "டெக்னிக்'! சிவகார்த்திகேயன் ஜிலீர்!

/idhalgal/cinikkuttu/samanthas-technique-sivakarthikeyan-jilair

ருசில ஹீரோயின்கள் திருமணத்திற்குப்பின், குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள். பெரும்பாலான ஹீரோயின்கள் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் தலைகாட்டுவார்கள். ஆனால் சமந்தாவோ, நாகார்ஜுன மகன் நாகசைதன்யா கல்யாணம் செய்துகொண்ட பிறகுதான் செம பிஸியாகிவிட்டார்

ருசில ஹீரோயின்கள் திருமணத்திற்குப்பின், குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள். பெரும்பாலான ஹீரோயின்கள் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் தலைகாட்டுவார்கள். ஆனால் சமந்தாவோ, நாகார்ஜுன மகன் நாகசைதன்யா கல்யாணம் செய்துகொண்ட பிறகுதான் செம பிஸியாகிவிட்டார். புதுசாக என்ட்ரியாகும் ஹீரோயின்களே கதிகலங்கும் அளவுக்கு, தனது ஹாட்டான ஃபோட்டோக்களை அவ்வப்போது ரிலீஸ் பண்ணி தூள் கிளப்புகிறார். சமீபத்தில் ஜிம் ஒன்றில் டிரைனர் ஒருவர், சமந்தாவிற்கு டிரைனிங் கொடுத்த வீடியோவையும், ஸ்டில் ஃபோட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் பண்ணி, ரசிகர்களை குதூகலப்படுத்திருக்கார் சமந்தா. அந்த ஃபோட்டோதான் இங்கே இருக்கு.

Advertisment

sivakarthikeyan

இதையெல்லாம் பார்த்த சிவகார்த்தி கேயனும் அதிரடியான ஒரு முடிவுக்கு வந்திருக்கார். அதாவது போன வருடகடைசியில் சிவகார்த்திகேயன் -சமந்தா காம்பினேஷனில் ரிலீசான "சீமராஜா'-வின் வசூல் திருப்திப்படும்படி இல்லை. ஆனாலும் அசராத சிவகார்த்திகேயன், அதே "சீமராஜா' என்ற டைட்டிலுடன், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் பண்ணிவிட்டார். ஆந்திர ரசிகர்களிடம் சமந்தாவிற்கு இருக்கும் கிரேஸையும், சமந்தா இப்போது ரிலீஸ் பண்ணியிருக்கும் ஃபோட்டோக்களையும் மனதில் வைத்து, ஆந்திராவில் ஒட்டப்பட்ட "சீமராஜா' போஸ்டர்களில், சமந்தா படத்தைப் பெரிதாகவும், தன்னோட படத்தை சிறிதாகவும் போடச் சொல்லிவிட்டாராம்.

Advertisment

samantha

தமிழைவிட தெலுங்கில் கலெக்ஷன் ஓ.கே.வாம்.

-ஈ.பா.பரமேஷ்

cine260219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe