Advertisment

சமந்தா அப்செட்!

/idhalgal/cinikkuttu/samantha-upset

மிழில் ரிலீஸாகி பழைய காதல் நினைவுகளைத் தூண்டிய "96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. ஷூட்டிங்கின் கேப்பில் அவ்வப்போது சிலபல கவர்ச்சி தூக்கலான படங்களை இன்ஸ்டாக்ராம் பக்கத்

மிழில் ரிலீஸாகி பழைய காதல் நினைவுகளைத் தூண்டிய "96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. ஷூட்டிங்கின் கேப்பில் அவ்வப்போது சிலபல கவர்ச்சி தூக்கலான படங்களை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றுகிறார். இதை ஒருசில ரசிகர்கள் எதிர்க்கவும் செய்கி றார்கள். சமந்தாவோ ஒரு பிகினி படத்தைப் போட்டு, அதை தனது கணவர் சைதன்யாதான் எடுத்தார் என்றுவேறு பதிவிட்டு திகில் கிளப்புகிறார்.

Advertisment

ss

சமீபத்தில் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தான் சாந்தமாக இருக்கும் படமொன்றைப் பதிவிட்ட சமந்தா, ""உங்கள் ஆழமான காயங்களைத் தொட்டுப் பாருங்கள். அதில் நீங்கள் உங்களை நிச்சயம் அடையாளம் கண்டடைவீர் கள். அங்கே அமைதி உங்களுக்காக காத்திருக்கி றது'' என்றுவேறு எழுதி இருக்கிறார். பொதுவாக இதுபோன்ற வசனங்கள் பிரபலங்கள் பலரும் பதிவிடுவது சகஜம்தான் என்றாலும், சமந்தாவின் ரசிகர்கள் அதை சும்மா விடுவதுபோல் தெரிய வில்லை. சமந்தாவின் கடந்தகால பிரச்சினை, காயத்திற்கான காரணம் என்பதுவரை தோண்டித்தேடி அதை கமெண்டிடுகிறார்கள்.

Advertisment

டிசம்பரில் ரீலிசாக வேண்டிய "96'-ஐ பிப்ரவரிக்கு தள்ளிப்போட்டதால் கொஞ்சம் அப்செட்டில் இருக்காராம் சமந்தா.

cini121119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe